தொப்பையை குறைக்க.. யாரும் சொல்லாத ரகசியம்... உதவும் 5 எண்ணெய்கள்!!
Oils For Belly Fat : வயிற்றை சுற்றி இருக்கும் தொப்பை கொழுப்பு மிகவும் பொதுவான ஒரு கவலைக்குரிய விஷயங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமான சமையல் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் இவற்றை சுலபமாக குறைக்கலாம்.
உடற்பயிற்சி மற்றும் உணவு முறை ஆகியவை உடற் தகுதிக்கான முக்கிய கூறுகள் என்றாலும், நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெயும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெய் கொலஸ்ட்ரால் அளவுகள், கலோரிகளை எரிக்கும் திறன் மற்றும் இதய ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும் என்பதால் ஒட்டுமொத்த நல்வாழ்வுடன் அவை இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, சரியான மற்றும் ஆரோக்கியமான சமையல் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்து, வயிற்றில் இருக்கும் கெட்ட கொழுப்பை சுலபமாக கட்டுப்படுத்த முடியும். உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய 5 ஆரோக்கியமான சமையல் எண்ணைகள் இங்கே.
ஆலிவ் எண்ணெய் : இந்த எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவும், மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாகவும் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கூடுதலாக, வளர்ச்சிதை மாற்ற விகிதத்தில் அதிகரிக்கும், மேலும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. கூடுதலாக, இது மனநிறைவு ஊக்குவிக்கிறது மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. இதனால் எடை அதிகரிக்கும் அபாயத்தை சுலபமாக குறைக்கலாம்.
தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெயில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. அதுவும் குறிப்பாக, இது தோல் மற்றும் முடிக்கும் நன்மை பயக்கும். இந்த எண்ணெய் கலோரிகளை எரிக்கவும், வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
இதையும் படிங்க: தொங்கும் தொப்பை சட்டுனு கரைய.. தினமும் இவற்றை ஊற வைத்து.. காலையில சாப்பிடுங்க!!
அவகேடோ எண்ணெய் : சமையலுக்கு சிறந்த எண்ணெய்களில் இதுவும் ஒன்றாகும். ஏனெனில் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இது உங்கள் வயிற்று கொழுப்பு உட்பட்ட ஒட்டுமொத்த கொழுப்பையும் மேம்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ போன்ற அத்தியாவாசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது வீக்கத்தை எதிர்த்து போராடவும், கொழும்பின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, இந்த எண்ணெயில் இருக்கும் பண்புகள் தொப்பையை குறைக்க பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க: 1 மாசம் 'இத' மட்டும் பண்ணுங்க.. எடையும் குறையும்..தொப்பையும் காணம போயிடும்!
கனோலா எண்ணெய் : இந்த எண்ணெயில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளதால், இது சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, இந்த எண்ணெயில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஆகியவை நிறைந்துள்ளது. இவை வீக்கத்தை குறைக்கவும், இன்சுலின் உணர்வு மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றது மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கெட்ட கொழுப்பை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
எள் எண்ணெய் : இந்த எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை கொழுப்பைக் கட்டுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, வயிற்றுக் கொழுப்பை குறைத்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.