பிறந்த குழந்தைகளை வைத்து போட்டோஷூட் செய்றது ஆபத்து..  குழந்தையோட ஆரோக்கியத்தையே பாதிக்கலாம்!! 

By Kalai Selvi  |  First Published Dec 16, 2024, 3:50 PM IST

Parenting Tips : பிறந்த குழந்தைகளை வைத்து போட்டோஷூட் செய்வது அவர்களுடைய ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என சொல்லப்படுகிறது. 


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகள் பிறந்ததும் புகைப்படம் எடுக்கும் பழக்கம் கிடையாது. குழந்தைகள் சற்று வளர்ந்த பின்னர், அதாவது தவளும் குழந்தைகளை போட்டோ எடுப்பதையே பெற்றோர் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் குழந்தைகள் பிறந்தது முதல் அவர்களுக்கு ஒரு வயது ஆகும் வரை ஒவ்வொரு மாதமும் விதவிதமாக போட்டோ எடுக்கும் பழக்கம் மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. 

ஒவ்வொரு பெற்றோரும் அவருடைய வசதிக்கு ஏற்றார்போல குழந்தைகளை வைத்து போட்டோஷூட் செய்கிறார்கள். இந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது, உறவினர்களுக்கு அனுப்பி வைப்பது என தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர். சில பெற்றோர் தாங்களே வீட்டில் செட் அப் செய்து குழந்தைகளை வைத்து புகைப்படம் எடுக்கின்றனர். ஆனால் இப்படி செய்யும்போது ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும் அது குழந்தையின் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணலாம். இது குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். 

Tap to resize

Latest Videos

குழந்தைகளை வைத்து வித்தியாசமாக புகைப்படங்கள் எடுப்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக ஏராளமான பணத்தையும் செலவழிக்கிறார்கள். ஆனால் பிறந்த குழந்தைகளை வைத்து இப்படி செய்வது ஆபத்து என மருத்துவர்கள் கூட எச்சரிக்கின்றனர். நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியான ஒரு அறிக்கையில், இப்படி பிறந்த குழந்தைகளை வைத்து போட்டோ எடுப்பது தொற்றுநோய் போல பரவி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் தெரிய வந்த முக்கியமான விஷயமே பிறந்த பச்சிளங்குழந்தைகளை போட்டோ எடுப்பதால் அவர்களின் முதுகெலும்பு, மூட்டுகள், நரம்புகள் பாதிக்கப்படலாம். குறிப்பாக அவர்களுடைய இரத்த ஓட்டம் கூட பாதிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது. போட்டோஷூட்டில் நடக்கும் சிறிய தவறு குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

இதையும் படிங்க:   Parenting Tips : பிற குழந்தைக்கு ஏன் பசும்பால் கொடுக்க கூடாது தெரியுமா..?

undefined

கன்னத்தில் கை வைத்த போஸ்! 

குழந்தைகளுடைய போட்டோஷூட்டில் ரொம்ப பொதுவான போஸ் அவர்கள் கன்னத்தில் கைகளை வைத்திருப்பது போன்ற போஸ்தான். தங்களுடைய இருகைகளாலும் முகத்தை தாங்கி இருப்பது போல குழந்தைகளை போஸ் கொடுக்க வைத்திருப்பார்கள்.  இந்த போஸ் மிகவும் ஆபத்தானது. பிறந்த குழந்தைகள் சமநிலையை கொண்டிருக்கமாட்டார்கள்.  இது மாதிரி போஸ் செய்யும் போது ஏதேனும் தவறு நிகழ்ந்தால் குழந்தைகளுடைய முகம் தரையில் விழக்கூடும்.  அவர்களுடைய கைகள் நடுங்க வாய்ப்புள்ளது. அவர்களின் எலும்புகள் வளர்ச்சி பெறாதவை. அதைக் கொண்டு இப்படி செய்வதால் எலும்புகள் உடைய வழி வகுக்கும். 

தொங்கும் போஸ்: 

சில போஸ்ட்களில் குழந்தைகள் தூங்கும் நிலையில் காணப்படுகின்றனர். அவர்களை துணியில் வைத்து 'ஹேமாக் போஸ்' கொடுக்க செய்கின்றனர். குழந்தையை தொங்கவிட பயன்படுத்தும் துணி வலுவானது அல்ல. மென்மையான துணியாக இருப்பதால் சற்று முடிச்சு தளர்ந்தாலும் குழந்தை கீழே விழ வாய்ப்பாகிவிடுகிறது. 

இதையும் படிங்க:  குழந்தையை குளிப்பாட்டும்போது இந்த '4' விஷயத்தை செய்ய மறக்காதீங்க!!

சாக்கு போஸ்: 

குழந்தைகளை வைத்து போட்டோஷூட் செய்யும் போது சாக்கு போஸ் ஒன்று கொடுக்கப்படுகிறது. உருளைக்கிழங்கு சாக்கில் துணியால் குழந்தையை சுற்றி கைகளை வாய்க்கு கீழே வைத்து எடுப்பார்கள். பார்க்க இந்த போஸ் அழகாக இருந்தாலும் குழந்தைக்கு அசௌகரியம் ஏற்படலாம். குறிப்பாக இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம். 

பிறந்த குழந்தைகளை வைத்து போட்டோஷூட் செய்யும் போது, பெரும்பாலும் குழந்தைகளை துணியால் சுற்றி வைத்துதான் போட்டோ எடுப்பார்கள். இது மாதிரியாக செய்யும் போது கிட்டத்தட்ட மூன்று சுற்று துணியால் சுற்றுகிறார்கள். இந்த நேரத்தில் முதல் சுற்றில் குழந்தையின் முதுகு, கழுத்து பகுதியில் இறுக்கம் பொறுக்கும் வகையில் முடிச்சு போடப்பட்டிருக்கிறதா? என பெற்றோர் கட்டாயம் சோதிக்க வேண்டும். குழந்தைகளுடைய மூட்டுகள், இடுப்பில் அழுத்தம் ஏற்படாத வகையில் துணியை இரண்டு முறை சுற்ற வேண்டும். சுமார் 20 முதல் 30 வினாடிகளுக்கு பின்னர் குழந்தையை அந்த துணியில் இருந்து எடுத்து விடுவது நல்லது. 

பக்கெட் போஸ்: 

குழந்தைகள் தங்களுடைய வாய்க்கு கீழ் கைவைத்தபடி, போஸ் கொடுக்கும் பக்கெட் போஸ் குழந்தைகளுடைய மூட்டுகளை பாதிக்க வாய்ப்பு உள்ளது. பிறந்த குழந்தைகளுடைய எலும்புகள் மென்மையானவை. இதை கருத்தில் கொண்டு புகைப்படங்கள் எடுக்க வேண்டும். சிலர் குழந்தைகளை ஏதோ சிந்திப்பது போல ஒரு கையை கன்னத்திலும், கண்களில் கண்ணாடியும் போட்டபடி வித்தியாசமாக புகைப்படங்களை எடுக்கிறார்கள். இது போன்ற போஸ்களை செய்யும்போது குழந்தைகளுடைய உடலில், எலும்புகளில் அழுத்தம் ஏற்படும். சில நேரங்களில் எலும்புகள் உடையவும் வாய்ப்புள்ளது.

உடன்பிறந்தவர்களுடன் போஸ்! 

பிறந்த குழந்தைகளை அவர்களுடைய அக்கா, அண்ணனோடு வைத்து புகைப்படம் எடுப்பதை பெற்றோர் விரும்புவது தவறில்லை. ஆனால் அந்த குழந்தைகளால் பிறந்த குழந்தையை கையாள முடியும் என்ற நம்பிக்கை பெற்றோருக்கு இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும். ஒருவேளை குழந்தையுடன் பிறந்தவர்கள் 2 அல்லது 3 வயது உடையவர்களாயின் அவர்களும் குழந்தைகள் தான். அவர்களுக்கு பிறந்த குழந்தைதை தூக்க தெரியாது என்பதை பெற்றோர் மனதில் கொள்ள வேண்டும். அதைப் போலவே செல்லப்பிராணிகளுடன் போட்டோ எடுப்பதை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு ஒவ்வாமை, தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. 

லைட்டிங்; 

பிறந்த குழந்தைகள் உணர்திறன் வாய்ந்தவர்கள். அவர்களுடைய கண்களால் அதிக ஒளியை காண முடியாது. குழந்தைகளின் கண்களை கூச செய்யாமல் இருக்கும் மென்மையான விளக்குகள், டிஃப்பியூசர்களை பயன்படுத்த வேண்டும். பிறந்த குழந்தைதை 5 முதல் 14 நாட்களுக்குள் போட்டோ எடுப்பார்கள். பிறந்த குழந்தைகள் அதிகமாக தூங்குவார்கள் என்பதால்  தூக்கக் கோணத்தில் எளிய புகைப்படங்களை எடுக்கலாம். வித்தியாசமான போஸ் மற்றும் போட்டோஷூட் செய்ய விரும்பினால் நிபுணர்கள் அல்லது மருத்துவர்கள் வழிகாட்டுதலுடன் புகைப்படங்கள் எடுக்கலாம். இதுவே குழந்தை ஆரோக்கியத்தை பாதிக்காது.

click me!