கண்ணாடி போல 'சருமம்' பளபளக்கனுமா? இந்த உணவுகள் போதும்.. டாக்டர் சிவராமன் சூப்பர் டிப்ஸ்!! 

By Kalai Selvi  |  First Published Dec 16, 2024, 1:30 PM IST

Glowing Skin Tips : சருமத்தை பளபளப்பாக பராமரிக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டுமென மருத்துவர் சிவராமன் சொன்ன விஷயங்களை இங்கு காணலாம். 


தங்களுடைய முகத்தை பளபளப்பாக வைத்திருக்க பெண்கள் பல விஷயங்களை முயற்சி செய்கிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் ஆண்களும் கூட தங்கள் சருமத்தை பராமரிக்க மெனக்கெடுகிறார்கள். இதற்காக காசு அதிகம் செலவு செய்வோரும் உண்டு. ஆனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் சேர்த்துக் கொள்ளும் உணவுகளை விட சருமத்தை பராமரிப்பதற்கு வேறு விஷயங்கள் தேவையில்லை என மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.  

சரும பராமரிப்புக்கு டிப்ஸ்! 

Tap to resize

Latest Videos

எவ்வளவு தண்ணீர் குடிக்கனும்? 

சருமத்தை ஜொலிக்க வைக்க முதலில் நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு நாளுக்கு 4 முதல் 4.5 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். எல்லோராலும் ஒரு நாளில் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க முடியாது. ஆகவே இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீராவது குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும்.

undefined

பளபளக்க வைக்கும் பழங்கள்: 

சரும பளபளப்பிற்கு பழங்கள் சாப்பிடுவது உதவி புரியும். நீங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் விளைவிக்கப்படும் பழங்களை சாப்பிடுங்கள்.  பெரும்பாலும் இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் பழங்கள் உடலுக்கு அதிக நன்மைகளை தரும். உதாரணமாக திருநெல்வேலி வெப்பமான பகுதி என்பதால் அங்கு வசிப்பவர்கள் கொய்யாப்பழம் அதிகம் சாப்பிடுவது உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும். 

இதையும் படிங்க:  இந்த ஜூஸை தொடர்ந்து குடித்தால் போதும்! உங்க முகம் தங்கம் போல் ஜொலிக்கும்!

உடல் சுடு: 

உடலில் வெப்பத்தை  அதிகரிக்கும் உணவுகளை அடிக்கடி சாப்பிடக்கூடாது.  அதை அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அதாவது, சிக்கன் சுவையாக இருக்கும். ஆனால் அது உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால் தவிர்க்க வேண்டும். 

எண்ணெய் உணவுகள்:

எண்ணெய்யில் பொறித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது.  இவற்றை உண்பதால் சரும வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.  சருமத்தில் வறட்சி ஏற்படுவதால் தோல் விரைவில் சுருங்க வாய்ப்புள்ளது. 

குளியல்: 

நாள்தோறும் தலைக்கு குளிக்க வேண்டும். வாரம் ஒருதடவை எண்ணெய் வைத்து குளிக்கலாம். இது உடலை குளிர்ச்சியாக வைக்கும். சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

இதையும் படிங்க:  Skin Care : மறந்தும் கூட உங்கள் முகத்தில் இவற்றை ஒருபோதும் அப்ளை பண்ணாதீங்க..!

கரப்பான் பண்டங்களை தவிருங்க! 

கரப்பான் பண்டங்கள் ஏதோ நொறுக்குத்தீனி என நினைக்கவேண்டாம். பாரம்பரியமான தமிழ் மருத்துவத்தில் சில உணவு வகைகளை கரப்பான் பண்டங்கள் என குறிப்பிடுகிறார்கள்.  மருத்துவர் சிவராமன் அது குறித்து சொல்லும்போது அதில் கடல் உணவுகளும் இடம்பெற்றிருந்தன. கரப்பான் பண்டங்கள் என்றால், மீன், நண்டு, இறால் போன்ற அசைவமும்,  கத்திரிக்காய், மக்காச்சோளம், கம்பு, வரகு ஆகிய சைவ வகை உணவுகளும் ஆகும். இதை சருமம் தொடர்பான பிரச்சனைகள் உள்ள சமயங்களில் உண்பதால் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.  சரும பிரச்சனை இருப்பவர்கள் அந்த சமயத்தில் சாப்பிட வேண்டாம். ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு மருந்து எடுப்பவர்கள் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

click me!