பாங்காக்கில் உள்ள இந்த 49 மாடி 'கோஸ்ட் டவர்' 26 ஆண்டுகளாக காலியாக உள்ளது.
உலகளவில் அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களில் நிச்சயம் பாங்காக்-கும் ஒன்று. பாங்காக்கின் உணவு வகைகள், வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் நிகரற்ற வசீகரத்தால் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. ஆனால் பாங்காக்-கை பற்றி பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது. ஆம்.. பாங்காக் முழுவதும் வெறிச்சோடிய கட்டிடங்கள் பல உள்ளன. இப்படி தனித்துவிடப்பட்ட ஒவ்வொரு கட்டிடத்திற்கு ஒரு வரலாறு இருக்கிறது.
இந்த கைவிடப்பட்ட கட்டிடங்களில் ஒன்று தான் 49-மாடி வானளாவிய கட்டிடமாகும். இந்த கட்டிடம் 26 ஆண்டுகளாக காலியாக உள்ளது. பலர் இதை கோஸ்ட் டவர், அதாவது பேய் டவர் என்று அழைக்கின்றனர். ஆனால் இந்த கட்டிடத்தின் உண்மையான பெயர் சாத்தோர்ன் யூனிக் டவர் (Sathorn Unique Tower). தாய்லாந்தின் டவுன்டவுனில் உள்ள பாங்காக்கில் வர்க்கம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்த கட்டப்பட்ட கட்டிடம் இப்போது பாழடைந்த கட்டிடமாக உள்ளது. இந்த கட்டிடத்திற்குள் நுழைய மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் சட்டவிரோதமாக கட்டிடத்திற்குள் நுழைந்து, இன்னும் உள்ளே நுழைந்து வீடியோக்களை எடுத்து, அவற்றை YouTube மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
புகழ்பெற்ற தாய்லாந்து கட்டிடக்கலை நிபுணரும் டெவலப்பருமான ரங்சன் டோர்சுவான் 1990 ஆம் ஆண்டில் இந்த அடுக்குமாடி கட்டிடத்திற்கான யோசனையை கொண்டு வந்தார், மேலும் அதற்கான பணிகள் தொடங்கியது. இருப்பினும், அவரது கனவு பாதியிலேயே கலைந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைக் கொல்லத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் 1993ஆம் ஆண்டு டோர்சுவான் கைது செய்யப்பட்டார்.
கொலையே நடக்காத போதும் 2008 இல் டோர்சுவான் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். பின்னர் 2010-ல் தான் அவர் விடுவிக்கப்பட்டார். இதனிடையே 1997-ல் ஆசிய நிதி நெருக்கடி, தாய்லாந்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. இதனால் இந்த சாத்தோர்ன் கட்டிடத்தின் கட்டுமானம் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 80% முடிக்கப்பட்ட இந்த கட்டிடம் பின்னர் கைவிடப்பட்டது. ஆனால் இந்த கட்டிடத்தின் கட்டுமானம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த கட்டிடம் ஒரு பழங்கால புதைகுழியில் கட்டப்பட்டதால் அது பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும், அங்கு பேய்கள் இருப்பதாக பலர் நம்புகிறார்கள்.
ரயில் நிலையங்களில் உள்ள இந்த அடையாள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
2014 டிசம்பரில் 43வது மாடியில் தூக்கில் தொங்கியபடி ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பிறகு பேய்களின் கதைகள் வேகமாக பரவி தொடங்கியது. காலப்போக்கில், பேய்கள் பற்றிய கதைகள் அதிகமாக பரவத் தொடங்கியது. அந்த பிரம்மாண்ட்ட கட்டிடத்தின் அச்சுறுத்தும் நிலை மற்றும் வெறுமை ஆகியவை சந்தேகத்திற்கு இடமின்றி இதுபோன்ற திகில் கதைகளின் வளர்ச்சிக்கு பங்களித்தன. 2017 ஆம் ஆண்டின் திகில் திரைப்படமான தி ப்ராமிஸ் இந்த கட்டிடத்தில் படமாக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் கார்ப்பரேட் விளம்பர பதாகைகள் மற்றும் சுவர் ஓவியங்களை காணலாம். மக்கள் நுழைவதைத் தடுக்க கட்டிடத்தைச் சுற்றி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, ஆனால் பாதுகாப்புப் பணியாளர்கள் கூட பாழடைந்த கட்டிடத்திற்குள் நுழைவதற்கு பயப்படுகின்றனர்.