பல தம்பதிகள் திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தடுக்க கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஆணுறைகளை அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர் என்றே கூறலாம். ஆனால் பலருக்கு அவற்றின் பயன்பாடு குறித்து பல சந்தேகங்கள் உள்ளன என்று தான் கூறவேண்டும்.
ஆணுறை பயன்படுத்துவது நல்லதா?
மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி.. ஆணுறை பயன்பாடு மிகவும் நல்லது. ஏனெனில் இது பல நோய்த்தொற்றுகள் மற்றும் பிற பால்வினை நோய்களில் இருந்து உங்களை விலக்கி வைக்கிறது. அவை எல்லா வகையான கருத்தடை முறைகளையும் விட சிறந்தவை என்றும் கூறப்படுகிறது. ஆணுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பால்வினை நோய்கள் பரவுவதைக் குறைக்கலாம். மேலும் தேவையற்ற கர்ப்பத்தின் வாய்ப்புகளை குறைக்க ஆணுறைகள் பெரிதும் உதவுகின்றன என்பது முற்றிலும் உண்மை.
undefined
விருந்தினர்களுடன் மனைவி உடலுறவு கொள்ளலாம்.. நூதன பழக்கத்தை பின்பற்றும் மக்கள்.. எங்கு தெரியுமா?
இரண்டு ஆணுறைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாமா?
கருத்தடைகளைப் பயன்படுத்தும் போது எந்தவொரு சிக்கல்களையும் தவிர்க்க எல்லோரும் விரும்புகிறார்கள் என்பது உண்மை தான். அதனால்தான் சிலர் ஒரே நேரத்தில் இரண்டு ஆணுறைகளைப் பயன்படுத்த முனைகிறார்கள், அது இரட்டிப்பு பாதுகாப்பு தரும் என்று கருதுகின்றனர். ஆனால் அறிவியல் ரீதியாக இதை செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இரண்டு ஆணுறைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், அவற்றுக்கிடையே அதிக அழுத்தம் மற்றும் உராய்வு ஏற்படும். இதனால் இரண்டுமே கிழிந்துவிட வாய்ப்புகள் மிக மிக அதிகம். பின் அவற்றை பயன்படுத்தியும் உபயோகம் இல்லாமல் போய்விடும்.
ஆணுறை பயன்படுத்துவதால் பாலியல் தூண்டுதல் குறையுமா?
பலர் பல ஆண்டுகளாக ஆணுறைகளைப் பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு இதில் பல சந்தேகங்கள் இருக்கின்றன. ஆணுறைகளின் அதிகப்படியான பயன்பாடு பாலியல் ஆசைகள் மற்றும் பாலியல் உணர்வுகளை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், கடந்த 2007ம் ஆண்டு இந்தியானா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆணுறைகளைப் பயன்படுத்துவது பாலியல் இன்பத்தையும் உணர்ச்சிகளையும் குறைக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆணுறைகள் தேவையற்ற கர்ப்பம் மற்றும் பாலியல் பரவும் நோய்களைத் தடுக்க மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த மாற்றங்களை செய்தால்.. செக்ஸ் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்.. ஆண்களே கட்டாயம் படிங்க..