நீரிழிவு அல்லது உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரைக்கு மாற்றாக, செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துகின்றனர்.
செயற்கை இனிப்புகள் இதய நோய்களின் ஆபத்தை அதிகரிக்கும் என்பது பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பது தெரியவந்துள்ளது. செயற்கை இனிப்புகள் இதய நோய்களின் வாய்ப்பை 9 சதவீதம் அதிகரிக்கின்றன என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நீரிழிவு அல்லது உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரைக்கு மாற்றாக, செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். முன்னதாக, உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய வழிகாட்டுதல்களை வெளியிடும் வரை செயற்கை இனிப்புகளை பயன்படுத்துவது எடை இழப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்று நம்பப்பட்டது.
ஆனால் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் தற்போது உடல் எடையைக் கட்டுப்படுத்த அல்லது நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இருதய நோய்கள் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க, செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக பரிந்துரைக்கின்றன. ஃபோர்டிஸ் மெமோரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இதய அறுவை சிகிச்சை தலைவர் டாக்டர் உட்கேத் திர் இதுகுறித்து பேசிய போது “ சில செயற்கை இனிப்பான்கள் இரத்த உறைவு போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம், இது இரத்த உறைவு உருவாவதை தொடங்கி மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு இட்டுச் செல்கிறது.
undefined
நீரிழிவு நோயின் ஆபத்தை அதிகரிக்கும் மோசமான பழக்கங்கள் இவை தான்.. கவனமா இருங்க.. இல்லன்னா சிக்கல்..
இரண்டாவது காரணம், இந்த செயற்கை இனிப்புகள் குடலில் சில வீக்கத்தைத் தூண்டுகின்றன, இது ஆரோக்கியமற்ற நாளச் சுவருக்கு வழிவகுக்கிறது, ஏற்கனவே நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு ஏற்கனவே இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது, இது மேலும் தீவிரமடைகிறது. எனவே உங்கள் இரத்த சர்க்கரையை குறைக்க செயற்கை இனிப்பு ஒரு தீர்வாகாது, மேலும் அவை அதிக ஆபத்தில் உள்ளன என்பதை அறிந்தவுடன், இந்த செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒருவர் கவனமாக இருக்க வேண்டும்,
அஸ்பார்டேம் போன்ற சில செயற்கை இனிப்புகள் பக்கவாதம் ஏற்பட காரணமாக உள்ளன. அதே போல் சுக்ரோஸ் மற்றும் ஸ்டீவியா ஆகியவை மாரடைப்பு போன்ற இருதய நோய் அபாயத்துடன் அதிகம் தொடர்புடையவை” என்று தெரிவித்தார்.
'பல்வேறு ஆய்வுகளின்படி, செயற்கை இனிப்புகள் டிஸ்லிபிடெமியா, வயிற்றுப் பருமன், உயர் இரத்த குளுக்கோஸ், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயத்துடன் தொடர்புடையவை. செயற்கை இனிப்புகள் மூலம் எடை இழப்பின் குறுகிய கால நன்மைகள் இருந்தாலும், ஆனால் உடல் கொழுப்பைக் குறைப்பதில் நீண்டகால நன்மைகள் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, செயற்கை இனிப்புகளின் பயன்பாடு சிறுநீர்ப்பை புற்றுநோயின் அபாயத்துடன் தொடர்புடையது. சர்க்கரை அல்லாத இனிப்புகள், குறிப்பாக இந்தியாவில் அவற்றின் நுகர்வு அதிகரித்து வருவதால், நமது சொந்த நாட்டு வழிகாட்டுதல்கள் தேவை என்று நிபுணர்கள் நம்புகின்றனர். 'நீண்ட கால ஆரோக்கிய நலன்களுக்காக, சர்க்கரை உட்கொள்ளலைக் குறைத்து, இயற்கையான மாற்று ஆதாரங்களான பழங்கள் மற்றும் பேரீச்சம்பழங்களுக்கு மாறுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குழந்தைகளை பாதிக்கும் ஆபத்தான Enterovirus குறித்து WHO எச்சரிக்கை.. இந்தியா கவலைப்பட வேண்டுமா?