குழந்தைகளை பாதிக்கும் ஆபத்தான Enterovirus குறித்து WHO எச்சரிக்கை.. இந்தியா கவலைப்பட வேண்டுமா?

By Ramya s  |  First Published Jul 10, 2023, 9:44 AM IST

ந்த வைரஸ் லேசான தொற்றுநோயை உருவாக்கினாலும், குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள் போன்ற அதிக ஆபத்துள்ள பிரிவினருக்கு இது ஆபத்தானது


சமீபத்தில், உலக சுகாதார அமைப்பு (WHO) ஐரோப்பா முழுவதும் ஒரு சில நாடுகளில் அதிகரித்து வரும் என்டரோவைரஸ் (Enterovirus) நோய்த்தொற்று குறித்து எச்சரித்துள்ளது. ஜூன் 26, 2023 நிலவரப்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகளில் 17 என்டரோவைரஸ் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரோஷியா, இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த மே மாதம், பிரான்சில் 9 என்டரோவைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன.  

அதில் 7 பேர் இறந்தனர். இதுவரை, ஸ்பெயினில் ஒரு மரணம் பதிவாகி உள்ளது.  ஐரோப்பா மட்டுமல்ல, அமெரிக்காவும் குழந்தைகளிடையே என்டோவைரஸ் தொற்று அதிகரிப்பதை கவனிப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

என்டரோவைரஸ் என்றால் என்ன?

என்டரோவைரஸ் என்பது எக்கோவைரஸ், காக்ஸ்சாக்கி வைரஸ், என்டோவைரஸ் மற்றும் போலியோவைரஸ் உள்ளிட்ட வைரஸ்களின் குழுவிற்குப் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்லாகும். இந்த வைரஸ் லேசான தொற்றுநோயை உருவாக்கினாலும், குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள் போன்ற அதிக ஆபத்துள்ள பிரிவினருக்கு இது ஆபத்தானது. என்டரோவைரஸ் தொற்று நோயாளிகளிடையே பல அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. கை, கால் மற்றும் வாய் நோய், அழற்சி தசை நோய், தோல் வெடிப்பு, வைரஸ் மூளைக்காய்ச்சல், மூளையழற்சி ஆகியவை சில அறிகுறிகளாகும்.

மற்ற வகைகளை விட இந்த புற்றுநோய் தான் ஆபத்தானது.. ஏன் தெரியுமா? மருத்துவ நிபுணர் விளக்கம்..

கவலைக்கு என்ன காரணம்?

என்டரோவைரஸ் தொற்றுகள் உலகம் முழுவதும் அசாதாரணமானது நிகழ்வு அல்ல என்றாலும், முன்னர் காணப்பட்ட நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் லேசானவை. ஆனால், தற்போது என்டரோவைரஸின் இறப்பு விகிதம் மிக வேகமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிதாகப் பிறந்த குழந்தைகளிடையே இந்த ஆபத்து அதிகமாகி உள்ளது. முதிர்ச்சியடையாத நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு கடுமையான தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஐரோப்பா முழுவதும் என்டோவைரஸ் நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு அமெரிக்க நிபுணர்களையும் எச்சரித்துள்ளது.

இந்தியா கவலைப்பட வேண்டுமா?

கடந்த ஆண்டு, மே 2022, கேரளாவில் குழந்தைகளை குறிவைக்கும் தக்காளி காய்ச்சல் பரவியது. தோலில் சிறிய தக்காளி போன்ற கொப்புளங்கள் உருவானது. 'தக்காளி காய்ச்சல்' என்பது கை, கால் மற்றும் வாய் தொற்று எனப்படும் என்டரோவைரஸ் நோய்த்தொற்றின் ஒரு புதிய மாறுபாடு என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2003 இல் இந்தியா தனது முதல் என்டரோவைரஸ் பாதிப்பை பதிவுசெய்தது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, அஸ்ஸாம் மற்றும் அந்தமான் தீவுகளில் என்டரோவைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எனினும் தற்போது, நாட்டில் புதிய வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால் நோய்த்தொற்றை தடுக்க வல்லுநர்கள் சரியான முறையில் தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க எச்சரித்துள்ளனர்.

நீரிழிவு நோயின் ஆபத்தை அதிகரிக்கும் மோசமான பழக்கங்கள் இவை தான்.. கவனமா இருங்க.. இல்லன்னா சிக்கல்..

click me!