வியட்நாமைச் சேர்ந்த 80 வயது முதியவர் 60 வருடங்களாக தூங்கவில்லை என்று கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூக்கம் என்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஒரு தனிநபருக்கு அத்தியாவசியமான ஒரு செயலாகும். சில நாட்களுக்கு குறைவான நேரம் தூங்கினாலே, நம் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். மேலும் ஒரு சில நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அதை நினைத்து பார்ப்பதே கடினம். ஆனால் 60 ஆண்டுகளாக ஒரு நபர் தூங்காமல் இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான். வியட்நாமைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர், குழந்தைப் பருவத்தில் தனக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்குப் பிறகு தூங்க முடியாமல் ஒரு முறை கூட தூங்கவில்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தாய் என்கோக் என்ற நபர் 1962 முதல் தூங்கவே இல்லை என்று கூறியுள்ளார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அயலவர்கள் அவர் தூங்குவதை ஒருபோதும் பார்த்ததில்லை, மேலும் பல மருத்துவ நிபுணர்கள் அவரது இந்த பிரச்சனையை பரிசோதித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் யாருமே அவரின் இந்த பிரச்சனைக்கான காரணத்தை அறிய முடியவில்லை. அவர் நிரந்தர தூக்கமின்மையால் அவதிப்படுவதாகத் தெரிகிறது. தூங்கவில்லை என்றாலும், 80 வயதான அவருக்கு எந்த மருத்துவப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதே இதில் ஆச்சர்யமான விஷயம்.
ட்ரூ பின்ஸ்கி என்ற யூடியூபர் தாய் என்கோக்-ஐ சமீபத்தில் சந்தித்தார். இதுகுறித்து பேசிய அவர் | நான் முதன்முதலில் தாய் என்கோக்கை பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு கேள்விப்பட்டேன், மேலும் அவரைக் கண்டுபிடிப்பது சாத்தியம் என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் அவரது இருப்பிடம் இதுவரை வெளிவரவில்லை. என்கோக் 1962 முதல் தூங்கவில்லை என்று கூறுகிறார்.” என்று தெரிவித்தார்.
வியட்நாம் போரின் போது இந்த சிக்கலை அனுபவிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. 'கிரீன் டீ மற்றும் அரிசி ஒயின்' மூலம் அடிப்படை மனித செயல்பாட்டிற்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் சராசரி நபரை போல் தன்னால் தூங்க முடியாதது குறித்து, அவர் தனது விரக்தியை வெளிப்படுத்தியதாக தெரியவருகிறது. 1955 முதல் 1975 வரை நடந்த போர் அவரின் தூக்கமின்மைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சவூதி முகமது கடந்த 30 வருடங்களாக தூங்கவில்லை..!
இப்படி பல ஆண்டுகளாக தூங்காத ஒருவர் செய்திகளில் வருவது இது முதல் முறையல்ல. முன்னதாக, சவுதி அரேபியாவைச் சேர்ந்த 70 வயது முதியவருக்கு கடந்த 30 ஆண்டுகளாக தூங்கவில்லை என்று கூறப்படுகிறது. அவரது தூக்கமின்மைக்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவர்களும் திணறி வருகின்றனர். சௌத் பின் முஹம்மது அல்-கம்டி எவ்வளவோ முயற்சித்தும் தன்னால் தூங்கவே முடியவில்லை என்று கூறுகிறார். மேலும் தனது தூக்கமின்மைக்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க பல முறை முயன்றாலும், அது பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
வீட்டில் உள்ள இந்த 4 பொருட்களை வைத்தே, செரிமான பிரச்சனைகளை தவிர்க்கலாம்..