இந்த படத்தில் முதல்ல உங்க கண்ணுக்கு தெரியிற விலங்கு எது? அதுக்கும் உங்க காதலுக்கும் தொடர்பு இருக்கு தெரியுமா?

By Ma riya  |  First Published Jun 29, 2023, 4:34 PM IST

நீங்கள் காதலில் எப்படிப்பட்ட நபர் என்பதை இந்தப் படத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.  


காதலில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்வார்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தை நன்றாக கவனியுங்கள். அதில் முதலாவதாக உங்கள் கண்ணுக்கு எந்த விலங்கின் உருவம் தெரிகிறது? ம்ம்.. சொல்லுங்கள். நீங்கள் காதலில் எப்படி என்று நாங்கள் சொல்கிறோம். இது மாதிரியான பர்சனாலிட்டி பரிசோதனைகள் உண்மையானவை. முன்னதாக உளவியல்ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தான் சொல்லப்படுகிறது. 

பறவையை கண்டால்...

Tap to resize

Latest Videos

undefined

நீங்கள் இந்த படத்தை காணும் போது முதலாவதாக பறவை உருவத்தை நீங்கள் கண்டால், உங்களுடைய குணம் 'பணிவு' என்று உளவியல் கூறுகிறது. நீங்கள் பழக பணிவான ஆள். உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்துவீர்கள். உங்களுடைய நண்பர்கள் வட்டத்தில் நீங்கள் எல்லோருக்கும் பிடித்த நபராகவும் இருப்பீர்கள். உங்களுக்கு காதலே அழகாக வெளிப்படுத்த தெரியும். 

நண்டு உருவம் தெரிந்தால்... 

இந்த படத்தில் நீங்கள் முதலாவதாக நன்டு உருவத்தை கண்டால், நீங்கள் வெளிப்படையான நபர் என்று அர்த்தம். உங்களுடைய மனதில் தோன்றுவதை உடனே சொல்லிவிடும் ஆளாக இருப்பீர்கள். எப்போதும் அதிக மகிழ்ச்சியுடன் இருக்க ஆசைப்படுவீர்கள். நீங்கள் தொடுதல் மூலமாக காதலை வெளிப்படுத்த விரும்பும் நபர். கைகள் கோர்ப்பது, முத்தமிடுவது போன்ற விஷயங்களை உங்களுக்கு ஈடுபாடு அதிகம்.

குதிரையை கண்டால்..

உங்கள் பார்வைக்கு முதலில் குதிரை தெரிகிறது என்றால் காதலில் அழுத்தமான ஆளாக இருப்பீர்கள் என்று அர்த்தம். உங்களின் துணைக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்து அவர்களின் வளர்ச்சியை காண விரும்புவீர்கள். நண்பர், காதலி யாராக இருந்தாலும் அவர்களுடைய தேவையை நிறைவேற்ற மெனக்கெடுவீர்கள். வார்த்தைகளை விடவும் செயல் மூலமாக அன்பு காட்டுவதை நம்பக் கூடியவர். 

டால்பின் தெரிகிறதா? 

முதலாவதாக உங்கள் கண்களுக்கு டால்ஃபின் தெரிந்தால், நீங்கள் படைப்புத்திறன் கொண்ட நபராக இருப்பீர்கள். கலைநயம் உங்களுக்கு அதிகம். காதலில் ரொமான்டிக்கான நபராக இருப்பீர்கள்.

கரடியை கண்டால்... 

கரடியை உங்கள் கண்கள் முதலில் பார்த்தால், நீங்கள் முதன்மையாக இருப்பதில் கவனம் செலுத்தும் நபராக இருப்பீர்கள். நீங்கள் பிறக்கும்போதே தலைமைத்துவத்துடன் பிறந்தவர்.

நாயை பார்த்தீங்களா? 

இந்த படத்தில் முதலாவதாக நாய்க்குட்டி உங்களுடைய கண்ணுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் இயல்பாகவே பணிவான குணம் கொண்ட நபராக இருப்பீர்கள். பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் நீங்கள் எதையும் எளிதாக கையாளும் பண்புடையவர்கள். 

இதையும் படிங்க: வாழ்க்கையில் ஒரு தடவையாச்சும் இப்படி முத்தம் கொடுங்க!! உங்க துணை சொக்கிடுவாங்க.. 23 வகை ரொமாண்டிக் முத்தங்கள்!

click me!