3,400 ஆண்டுகள் பழமையான நகரம் நதிக்கு அடியில் கண்டுபிடிப்பு.. வறட்சியால் வெளிவந்த வரலாற்று உண்மை..

By Ramya s  |  First Published Aug 5, 2023, 11:46 AM IST

Tigris நதி பண்டைய மெசபடோமியாவின் இரண்டு பெரிய ஆறுகளில் ஒன்றாகும்.


பழங்கால கட்டிடங்கள், கல்வெட்டுகள், சில சமயங்களில் இயற்கை பேரிடர்களாலும், சில மேம்பட்ட தொழில்நுட்பங்களாலும் அழிக்கப்படுகின்றன. ஆனால் சில நேரங்களில் அதன் எச்சங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் 3400 ஆண்டுகள் பழமையான நகரத்தை பற்றி தற்போது பார்க்கலாம். ஆம். சர்வதேச தொல்லியல் துறையின் குழு ஈராக்கின் குர்திஸ்தானில் 3400 ஆண்டுகள் பழமையான நகரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நகரம் Tigris என்ற ஆற்றின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்தில் மக்கள் வாழ்ந்ததற்கு பல சான்றுகள் உள்ளன. Tigris நதி பண்டைய மெசபடோமியாவின் இரண்டு பெரிய ஆறுகளில் ஒன்றாகும்.

பருவநிலை மாற்றத்தால் உலகில் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக ஈராக் உள்ளது. குறிப்பாக நாட்டின் தென்பகுதி பல மாதங்களாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் மிக முக்கியமான நீர்த்தேக்கங்களில் ஒன்றான மொசூல் அணை Tigris ஆற்றின் மீது கட்டப்பட்டது. தண்ணீர் அதிகமாக இருந்ததால் பழங்கால தடயங்களை அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், கடந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக, டைகிரிஸ் நதி நீர்மட்டம் குறைந்தது. இந்த அணையின் நீர்மட்டம் குறைந்த பிறகு தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் கி.பி 1275-1475 இல் மிட்டானி பேரரசு இந்த நகரத்தில் அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் கெமுனேவில் அமைந்துள்ளது.

Latest Videos

undefined

அந்த நகரத்தின் பல இடிபாடுகள் நீருக்கடியில் இருப்பதை தொல்பொருள் ஆய்வாளர் கண்டுபிடித்தனர். மண் செங்கற்கள், சுவர்கள், கோபுரங்கள், பல மாடி கட்டிடங்கள் மற்றும் பல வகையான வடிவமைப்புகள் மற்றும் கட்டமைப்புகள் போன்ற பழங்கால இடிபாடுகள் டைகிரிஸ் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 10 கியூனிஃபார்ம் களிமண் மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. கியூனிஃபார்ம் ஒரு பழங்கால எழுத்து நடை. இந்த எழுத்துக்களை படித்து புரிந்து கொள்வது எளிதல்ல. இது தற்போது மொழிபெயர்ப்பிற்காக அனுப்பப்பட்டுள்ளது.

அரண்மனை உட்பட பல பெரிய கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குர்திஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹசன் அஹ்மத் காசிம் பேசிய போது “  இந்த கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அதில் ஏராளமான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும், அநேகமாக பிராந்தியம் முழுவதிலும் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம். இந்த அகழ்வாராய்ச்சி முடிவுகள் மிட்டானி பேரரசின் முக்கிய மையமாக இருந்ததைக் காட்டுகின்றன என்றும் அவர் கூறினார்.

கிமு 1350 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரம் அழிக்கப்பட்டது. அப்போது சுவர்களின் மேல் பகுதிகள் இடிந்து கட்டிடங்களை புதைத்ததன் காரணமாக சுவர்களின் நல்ல பாதுகாப்பு உள்ளது. இது தவிர பீங்கான் ஜாடி, களிமண் போன்றவையும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மிட்டானி சாம்ராஜ்ஜியத்தின் மண் சுவர்கள் இவ்வளவு காலம் நீரில் மூழ்கியிருந்தும் இன்னும் அப்படியே இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்..மிட்டானி சாம்ராஜ்யத்தில் முக்கியமான இடமாக இருந்த ஜக்கிகு நகரமாக இது இருந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு மிட்டானி கால நகரத்தின் முடிவு பற்றிய முக்கிய தகவல்களை வழங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்தின் மதிப்பு 6 லட்சம் கோடி! யார் அந்த தம்பதி?

click me!