செக்ஸ் வைத்துக்கொண்டால் 'கொரொனா' பரவுமா..? பரவாதா..? டாக்டர் சொல்லும் விளக்கம் என்ன?

By Thiraviaraj RMFirst Published Mar 19, 2020, 11:14 PM IST
Highlights

"கொரோனா" இந்த வார்த்தையை கேட்டாலே மன்மதனே அஞ்சி நடுங்கும் அளவிற்கு போய்விட்டது.மக்களும் அச்சத்தோடு தான் தங்களது வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள்.அந்த அளவிற்கு கொரோனா ஈவு இரக்கமற்ற அரக்கனாக உகத்தையே பயமுறுத்திக்கொண்டிருக்கிறது

T.Balamurukan
"கொரோனா" இந்த வார்த்தையை கேட்டாலே மன்மதனே அஞ்சி நடுங்கும் அளவிற்கு போய்விட்டது.மக்களும் அச்சத்தோடு தான் தங்களது வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள்.அந்த அளவிற்கு கொரோனா ஈவு இரக்கமற்ற அரக்கனாக உகத்தையே பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.இந்த நிலையில், கையை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், இருமல் இருந்தால் 1 மீட்டர் தூரம் தள்ளியிருந்து பேச வெண்டுமென்று சொல்லுகிறார்கள். இப்படிபட்ட சூழ்நிலையில் கணவன் மனைவி இடையே தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்கிற கேள்வி ஆண்களிடமும்,பெண்களிடமும் ஆயிரம் மில்லியன் கேள்விகளை தாங்கி நிற்கிறது. 

 சாதாரணமாகவே இருமல்,சளி என பலரையும் ஆட்கொண்டுள்ள நிலையில் ,செக்ஸ் வைத்துக்கொண்டால் கொரோனா வைரஸ் பரவுவதை அதிகரிக்குமா? என்கிற கேள்விக்கு செக்ஸாலஜி மருத்துவரிடம் பதில் கேட்டோம்.
'இதற்கு சரியான பதில் இல்லை. ஆனால் அதை உறுதியுடன் "ஆம்" என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் இதுவரை கிடைத்த தகவல்களிலிருந்து, நோய்த்தொற்று பாலினத்தினால் ஏற்பட்டதா? என்பது தெளிவாக எந்த தகவலும் இல்லை. ஆனால், இந்த வைரஸால் சிக்கிய எந்தவொரு நபரிடமிருந்தும் தூரத்தை பாரமரிப்பது இங்கே நினைவில் கொள்ளப்பட வேண்டும். அவர்களுடன் அதிகம் நெருங்க வேண்டாம். அவர்களை அரவணைக்க வேண்டாம். 


இருமல் மற்றும் தும்மினால் வைரஸ் பரவுவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதால், அத்தகைய நபர்களுடன் நெருக்கமாக இருப்பது, உங்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை என்பதை உங்களுக்கு நினைவுப் படுத்துகிறோம். எனவே கொரோனோ வைரஸில் இருந்து தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் முழு கவனம் செலுத்துங்கள்.இந்த தாக்குதல்,பயம் எல்லாம் சரியான பிறகு நீங்கள் இன்பத்தை அனுபவிக்கலாம் என்கிறார் அவர்.

click me!