மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமகளின் பின்னலைப் பார்த்திருப்பீர்கள், சாக்லேட்டுகளால் அலங்கரிக்கப்பட்டதைப் பார்த்தீர்களா? சாக்லேட் பின்னல்களால் அசரடித்த மணமகளின் வைரல் வீடியோ இங்கே...
இந்தியாவில் திருமணங்கள் பல சடங்குகளை உள்ளடக்கிய பிரமாண்டமான விழாக்கள் ஆகும். ஒவ்வொருவரும் தங்கள் திருமண நாளில் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்க விரும்புகிறார்கள். திருமண மண்டபத்தின் அலங்காரம் முதல் உணவு வரை பல திட்டங்கள் புதுமையாக இருக்க மெனக்கெடுகின்றனர். இதில் மணமகள் அலங்காரம் அதிக கவனம் பெறும். எந்தெந்த நிகழ்ச்சிக்கு எப்படி தயாராக வேண்டும், என்ன மாதிரியான உடை, நகைகளை அணிய வேண்டும் என்று மணமகள் பல நாள்களாக திட்டமிடுவார். சிலருடைய திருமணங்கள் வைரலாகும். இதே டிரெண்டை பின்பற்றி மணமகள் தனது திருமண நிகழ்வு ஒன்றில் வித்தியாசமான சிகை அலங்காரங்களை முயற்சி செய்துள்ளார்.
இவர் தனது ஹேர் ஸ்டைலுக்கு பூக்களுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக சாக்லேட்டுகளைப் பயன்படுத்தியுள்ளார். முழு சிகை அலங்காரமும் பூக்களுக்கு பதிலாக சாக்லேட், மிட்டாய்களால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேக்கப் ஆர்டிஸ்டாக சித்ரா என்பவர் இருந்துள்ளார். சிகை அலங்காரம் செய்ய கிட்கேட், 5 ஸ்டார், மில்கிபார், ஃபெரெரோ ரோச்சர் ஆகிய பிராண்டுகளின் சாக்லேட்டுகளை தேர்வு செய்துள்ளனர். மணமகள் தனது மஞ்சள் நிற ஆடைக்கு மேட்சிங்காக மாம்பழ மிட்டாய்களை காதில் காதணிகளாக அணிந்திருந்தார். அவரது ஒட்டியானம், நெக்லஸ் ஆகியவையும் சாக்லேட்களால் இருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: எக்காரணம் கொண்டும் வீட்டின் இந்த திசையில் குப்பை தொட்டியை வைக்கவே கூடாது.. மீறி வைத்தால் என்னாகும் தெரியுமா?
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ இரண்டு லட்சம் லைக்குகளையும், ஆறு மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. பலரும் தங்களது பாராட்டுகளை இதய ஈமோஜி மூலம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மணமகள் குழந்தைகளுடன் சுற்றித் திரிவது நல்லதல்ல என கிண்டல் செய்தும் வருகின்றனர். இந்த முயற்சி படைப்பாற்றலின் வெளிப்பாடு பாராட்டப்பட வேண்டியது என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
சிகை அலங்காரங்கள் தற்போது மிகவும் வேடிக்கையாகவும், அதிக செலவு வைப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். எது எப்பாடியாக இருந்தாலும் மணமகளின் மேக்கப் நன்றாகவே உள்ளது. பூக்களை தலையில் சூடினால் வாடிய பிறகு பயன்படுத்த முடியாது. ஆனால் சாக்லேட்டுகளை சூடினால் கல்யாணம் முடிந்த பிறகு ஜோடியாக சாப்பிட்டு திருமணத்தைக் கொண்டாடலாம்.
இதையும் படிங்க: விராட் கோலி மட்டுமில்ல ரன்பீரும் அப்படித்தான்! பிரபலங்கள் ஏன் சோசியல் மீடியால குழந்தைங்க முகத்தை மறைக்கிறாங்க?