ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கவேண்டிய 5 புடவைகள்..! முழு விபரம் இதோ..!!

By Pani Monisha  |  First Published Jan 13, 2023, 11:34 AM IST

இந்தியாவில் பெண்கள் மத்தியில் மிகவும் விருப்பமான ஆடைகளில் ஒன்றாக இருக்கும் புடவைகள், அழகுக்கே அழகு சேர்க்கும் சிறப்பை கொண்டுள்ளது. அந்த வகையில் எல்லா பெண்களிடம் இருக்க வேண்டிய புடவைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.


இந்தியா மட்டுமில்லாமல் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலும் பாரம்பரிய உடையாக புடவைகள் விளங்குகின்றன. உலகம் முழுவதும் உள்ள ஆடை வடிவமைப்பாளர்களால் பெரிதும் கவரப்பட்ட ஆடை வகைகளில் புடவை முதன்மையானதாக உள்ளது. தலைமுறை தலைமுறையாக பலராலும் நேசிக்கப்பட்டு வரும் புடவையில் பல்வேறு ரகங்கள் உள்ளன. அன்றாடம் அணிவதில் துவங்கி விசேஷ நாட்கள் வரை புடவை அணிவது இந்தியப் பெண்களின் பண்பாட்டு அடையாளமாக உள்ளது. புடவை குறித்த உள்ளடக்கம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டாலும், இந்தியாவில் இருந்து பார்த்தால் இதனுடைய சிறப்பம்சம் நிச்சயமாக புரிந்துவிடும். அந்த வகையில் எல்லா பெண்களிடமும் இருக்க வேண்டிய புடவை ரகங்கள் குறித்து ஒவ்வொன்றாக தெரிந்துகொள்வோம்.

மங்களகிரி பருத்திப் பட்டுப் புடவை

Tap to resize

Latest Videos

ஆந்திர மாநிலம் மங்களகிரி நகரத்தில் இருந்து இப்புடவை ரகம் தயாரிக்கப்படுகிறது. இது முற்றிலும் கைகளால் நெசவு செய்யப்படுவதாகும். அதன் துணி, சீப்பு நூலில் இருந்து குழி தறிகளைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படுவதால் மங்களகிரி பட்டுக்கு தனித்துவம் கிடைக்கிறது. இதனுடைய வடிவமைப்பு நிஜாம் பாணியில் இருக்கும். இது மிகவும் நவநாகரீகமானது மட்டுமில்லாமல், ஒவ்வொரு காலநிலைக்கும் ஏற்றது மங்களகிரிப் பருத்திப் பட்டு புடவைகள்.

பகல்பூரி பட்டுப் புடவைகள்

இந்தியாவில் பெரும்பாலான பெண்களால் விரும்பப்படும் புடவைகளில் ஒன்று பகல்பூரிப் பட்டு. இது பீகாரில் மாநிலத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதனுடைய சிறப்பே புடவையை நெசவு செய்ய பயன்படுத்தப்பட்டும் பட்டு நூல் தான். அதை நூலாக பார்க்கும் போதே ஆடம்பரமாகவும் தனித்துவம் கொண்டும் இருக்கும். ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய கூட்டங்களுக்கும் அணிய ஏற்றதாக பாகல்பூரி பட்டுப் புடவைகள் உள்ளன. இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் உற்பத்தியின் போது குறைந்த எண்ணிக்கையிலான பட்டுப்புழுக்களைப் பயன்படுத்துகிறது. இந்த புடவைகள் பழமையான கலைப்படைப்புகளில் ஒன்றாகும், மேலும் இந்த புடவைகள் நாட்டிற்கு வெளியேயும் ஏற்றுமதி செய்யப்படுவதில் முதன்மையானதாக உள்ளன.

நவுவாரி புடவைகள்

மகாராஷ்டிராவில் பல்வேறு புடவை ரகங்கள் தயாரிக்கப்படுவது உண்டு. அதில் நவுவாரி புடவைகள் தனித்துவமானவை. அதற்கு காரணம் இவை பெரும்பாலும் 9 கஜத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. மகாராஷ்டிராவில் பெரும்பாலான பெண்கள் இந்த வகை புடவையை மட்டுமே அணிவார்கள். இதை நவீன பண்பாட்டுக்கு ஏற்றதாகவும் உள்ளது. மராட்டியப் பேரரசின் பெண்களின் வசதியைக் கருத்தில் கொண்டு நவுவாரி புடவைகள் உருவாக்கப்பட்டன. இதை கால்களுக்கு இடையில் கொண்டு வந்து பலரும் அணிவதால், உள்பாவாடை அணியும் தேவை இருக்காது. 

இதையும் படிங்க: பட்ஜெட் ஷாப்பிங் ஸ்டைலிஷ் லுக்.. தெரிஞ்சுக்க வேண்டிய டெனிம் டிரெஸ் காம்பினேஷன்!

கோசா பட்டுப் புடவை

இந்தியப் பட்டுப் புழுவான அன்தெரியா மைலிட்டாவிலிருந்து கோசா பட்டுப் புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு சத்தீஸ்கர் மாநிலம் பெயர் பெற்றதாக திகழ்கிறது. இந்த வகை பட்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த புடவைகளின் பட்டு நீடித்தது, மென்மையானது மற்றும் தூய்மையானது. அதனால் இந்தியப் பெண்கள் பலரும் கோசா பட்டுப் புடவையை விரும்பி உடுத்துகின்றனர். வெறும் குறைந்த முயற்சியில் இந்த புடவையை மிகவும் நேர்த்தியாக கட்டுவிடலாம். ஆனால் இதை சுத்தம் செய்யும் போது மட்டும் கவனம் தேவை. கோசா பட்டு மிகவும் மென்மையானது என்பதால், ரொம்பவும் கடினமான செயல்பாடுகளை பின்பற்றி துவைக்கக் கூடாது.

துஷார் பட்டு

இந்தியா முழுவதும் பிரபலமான பட்டுகளில் ஒன்று துஷார் பட்டு. பல வகையான பட்டுப்புழுக்களைப் பயன்படுத்தி துணி தயாரிக்கப்படுவதால், அவ்வளவு சீக்கரம் வெளுத்துப் போகாது. இயற்கையான நெசவு, செழுமையான அமைப்பு மற்றும் ஆழமான தங்க நிறம் ஆகியவற்றின் காரணமாக, துஷார் பட்டுக்கு சந்தையில் அதிக மதிப்பு உள்ளது. இது மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கைத்தறி புடவையை நீங்கள் திருமணத்திற்கோ அல்லது அது சார்ந்த நிகழ்வுகளுக்கு அணியும் போது எடுப்பாக இருக்கும். 

இதையும் படிங்க: சரும ஆரோக்கியத்தை காக்கும் ரோஸ் வாட்டர்...அறிந்ததும்... அறியாததும்..!!

click me!