Rose Tea: நீங்கள் தேநீர் பிரியரா ..? தினமும் 2 கப் ரோஜாப்பூ டீ போதும்....இத்தனை நன்மைகள் இருக்கா..?

By Anu KanFirst Published Jun 25, 2022, 3:45 PM IST
Highlights

Rose Tea: நீங்கள் வழக்கமாக குடிக்கும் டீ வகைகளைத் தவிர்த்து வேறு சில ஆரோக்கியமான தேநீர் வகைகளை வீட்டிலேயே செய்யலாம். ஆயுர்வேத, சித்தா மருத்துவமானது ரோஜாப்பூ டீ குடித்தால் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று கூறுகிறது. 
 

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தேநீரைத் தான் அதிகளவில் குடிக்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்தின் சிறப்புப் பெயரைத் தாங்கி வரும் சிறப்பு தேநீர் உட்பட மசாலா தேநீர், இஞ்சி டீ, பிளாக் டீ, வைட் டீ பல வகை தேநீர்கள் உள்ளன. உடல் எடையை குறைக்க, உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு ஆரோக்கியமான டீ என்றால் அது கிரீன் டீ ஆகத் தான் இருக்கும். இன்று ஏராளமானோர் பால், டீ குடிப்பதை விட, கிரீன் டீயைத் தான் அன்றாடம் பருகி வருகின்றனர். 


 
நீங்கள் வழக்கமாக குடிக்கும் டீ வகைகளைத் தவிர்த்து வேறு சில ஆரோக்கியமான தேநீர் வகைகளை வீட்டிலேயே செய்யலாம். ஆயுர்வேத, சித்தா மருத்துவமானது ரோஜாப்பூ டீ குடித்தால் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று கூறுகிறது. 

ரோஜாப்பூ டீ குடிப்பதின் நன்மைகள்:

1. இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் ஆன்டி-பாடிகளை வழங்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கையும் குறையும். 

2. மூளை ஆரோக்கியமாக இருக்கும். சர்க்கரை நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை தருகிறது. அஜீரணக் கோளாறுகளில் இருந்து தீர்வு தருகிறது. 

3. உடலில் உள்ள உஷ்ணத்தை கட்டுப்படுத்துகிறது. மாதவிடாய் வலியால் துடிக்கும் பெண்ணாக நீங்கள் இருந்தால் ரோஸ் டீ அவசியம் குடிக்கலாம்.அதேபோன்று, உடல் எடையை குறைக்க நினைக்கும் பலரும் தங்கள் டயட் லிஸ்டில் தவறாமல் சேர்ப்பது நல்லது. 

 ரோஜாப்பூ டீ செய்முறை:

உங்களுக்கு தினமும் ரோஜாப்பூ டீ குடிக்க வேண்டும் என்றால், ரோஜாவை வாங்கி காயவைத்து அதை ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். தினமும் ஒன்றரை கப் தண்ணீரில் ரோஜா இதழ்களைப் போட்டு அதை ஒரு கப் அளவு சுண்ட வைத்துக் குடிக்கலாம். இது மட்டுமல்லாமல் ஆவரம்பூ தேநீர், சங்குப்பூ தேநீர் ஆகியனவற்றையும் போட்டுக் குடிக்கலாம். 

மேலும் படிக்க ....Sani Peyarchi 2022: ஜூன் மாதம் சனி மற்றும் புதன் கூட்டணி...புதிய ஒளி பிறக்கும்..வாழ்வில் ராஜயோகம் உறுதி...

சங்குப்பூ பூ தேநீர் செய்முறை எப்படி..?

சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவை கொண்டது. இவை உடல் வெப்பத்தைத் தணிக்கும். தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். வழக்கமாக தேநீர் குடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்க முடியாதவர்கள் இதுபோன்ற தேநீர் வகைகளை பயன்படுத்து பாருங்கள். 

ஆவாரம் பூ தேநீர்..?

ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மையாக அரைத்து கொண்டு,  பாத்திரத்தின்  தண்ணீர் ஊற்றி இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும். நிறம் மாறியதும், பால் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி குடிக்கவும். பால் இல்லாமலும் குடிக்கலாம்.  

 மேலும் படிக்க....Horoscope: சோதனை வருதாம்..? சிம்மம், துலாம் ராசிக்காரர்களே மிகுந்த எச்சரிக்கை...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்


 

click me!