Relationship: உங்கள் துணை உங்களை ஏமாற்றும் போது அவர்கள் மறைக்கும் ஆதாரங்கள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
உங்கள் திருமணத்திற்கு பிறகு, உங்கள் துணை வேறு ஒருவரின் வசீகரத்தால் ஈர்க்கப்படலாம். திருமணத்திற்கு பிறகு உங்கள் துணைவேறொரு உறவில் இருப்பது உங்கள் உறவை சீர்குலைக்கும். பிறருருடன் தொடர்பில் இருப்பது உங்கள் துணைக்கு மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கலாம். அப்படி, உங்கள் துணை உங்களை ஏமாற்றும் போது அவர்கள் மறைக்கும் ஆதாரங்கள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மிகவும் தந்திரமாக பேசுவார்கள்:
எந்த விஷயமாக இருந்தாலும், மிகவும் கவனமாக பேசுவார்கள். அவர்கள் ஏற்கனவே தங்கள் மனதில் ஒரு கதையை ரெடி பண்ணி வைத்திருப்பார்கள். அதனால் அவர்கள் தங்கள் துணையிடம் எந்த சந்தேகமும் வராத வகையில் நடந்து கொள்வார்கள். அவர்களின் நேரங்கள் மற்றும் அவர்கள் இருந்தஇடங்கள் குறித்து மாத்தி மாத்தி பேசுவார்கள்.
அதிகம் விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள்:
தேவையில்லாத விஷயங்களை பற்றி உங்களிடம் அதிகம் பேசுவார்கள்இருவருக்கும் இடையே எந்த ரகசியமும் இல்லை என்று அவர்களை நம்ப வைக்க முயற்சி செய்வார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் உங்களிடமிருந்து மிகப்பெரிய விஷயங்களை மறைக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
போனை பயன்படுத்த கொடுக்க மாட்டார்கள்:
போனை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். அவர்களின் செல்போனில் எப்போதும் ஏராளமான பாஸ்வேர்டுகள் இருக்கும். நீங்கள் எப்போதாவது, அவர்களின் செல்போனை பயன்படுத்த முயற்சித்தால், அனுமதிக்க மாட்டார்கள். அது அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் மற்றும் தங்கள்அதரங்களை உங்களிடமிருந்து மறைக்க முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.
தங்கள் ஹிஸ்டரியை அடிக்கடி அழித்து விடுவார்கள்:
கள்ள உறவில் இருப்பவர்கள் தனது லேப்டாப் அல்லது ஃபோனில் உள்ள ஹிஸ்டரியைத் அடிக்கடி டெலிட் செய்வார்கள். ஏனெனில் அது மிகவும் சந்தேகத்திற்குரியதாகத் தோன்றும். எனவே, அடிக்கடி அவற்றை உங்களிடம் மறைப்பார்கள்.
அடிக்கடி அலுவலகத்தில் வேலை என்பார்கள்:
அவர்கள் தங்களுக்குள் ஒரு அட்டவணையை போட்டு வைத்து, நேரம் செலவிடுவார்கள். அடிக்கடி அலுவலகத்தில் வேலை என்பார்கள். ஆனால் உண்மையில், அவர்கள் தங்கள் வேலையை மிக விரைவாக முடித்து, அந்த நேரத்தை மற்றவருடன் செலவிடுகிறார்கள்.