Marriage Ring: உலகின் பல பகுதிகளில் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தில் மோதிரத்தை ஏன் இடது மோதிர விரலில் அணிகிறார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் சொல்வது வழக்கம். ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு திருமண முறையை பின்பற்றி வருகிறார்கள். இந்து கலாச்சார திருமணத்தில், ஒவ்வொரு பெண்ணும் கழுத்தில் தாலி அணிவது, கால்களுக்கு மெட்டி அணிவது, கைகளுக்கு கண்ணாடி வளையல் போடுவது மற்றும் நெற்றியில் குங்கும் வைப்பது போன்றவை நம்முடைய முன்னோர்கள் வழி வழியாய் நமக்கு சொல்லி தந்த மரபுகளில் ஒன்றாகும்.
அதேபோன்று, கிறிஸ்தவ முறைபடி, மோதிரம் மாற்றிக்கொள்ளப்படும். இந்து முறைப்படி பொதுவாக நிச்சயத்தார்த்தில் மணப்பெண்ணும், மணபையனும் மோதிரம் மாற்றிக்கொள்வது உலகின் பல பகுதிகளில் பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது.
அப்படி, திருமணம் மற்றும் நிச்சயதார்த்தில் மோதிரத்தை ஏன் இடது மோதிர விரலில் அணிகிறார்கள் என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
1. இந்த பழக்கம் பண்டைய எகிப்து நாகரிகத்திலிருந்து தோன்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன்படி, பண்டைய எகிப்தியர்கள் இதயத்திலிருந்து ஒரு நரம்பு விரல்களுக்கு செல்கிறது என்று நம்பினர் இவற்றை மதத்தோடும், தங்களது கலாச்சாரத்தோடும் தொடர்புபடுத்தினர்.
2. திருமண மோதிரம் பெருமையும், மங்கலமும் தரக்கூடிய அணிகலன்களுள் முக்கியமானது . உயிர், செயல்பாடு, பாலியல் ஆகியவற்றைக் குறிக்கிறது. தன்னம்பிக்கை, உறுதிப்பாடு, லட்சியம் மற்றும் சுயநலம், வாழ்க்கையில் செயல்திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது.
3. அந்த விரலில் ஒரு வட்ட மோதிரத்தை அணிவது ஒருவரின் வாழ்க்கை துணையுடன் நித்திய அன்பையும் இணைப்பையும் குறிக்கிறது.
4. எகிப்தியர்கள் ரத்த நாளத்திற்கும், நரம்புக்கும் இடையிலான வித்தியாசம் தெரியாமல் தவறாகப் புரிந்து கொண்டு அதை காதலனின் நரம்பு என்று அழைத்து இடது கை விரலில் மோதிரத்தை அணிவித்ததாக கூறி இருக்கிறார்.