Bollywood Actress: அழகு நடிப்பு மட்டுமல்லாம், சமையல் கலையிலும் கை தேர்ந்த பாலிவுட் நடிகைகளை யார் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பாலிவுட்டில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வரும், சினிமா நடிகைகளும் அவரவர் வீட்டில் மகளாக, அம்மாவாக, மனைவியாக தான் இருக்கிறார்கள். அதில், சிலருக்கு தாங்கள் சமைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு உணவு பரிமாறிமாறுவது மிகவும் பிடிக்கும். அப்படியாக, அழகு நடிப்பு மட்டுமல்லாம், சமையல் கலையிலும் கை தேர்ந்த பாலிவுட் நடிகைகளை யார் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
undefined
தீபிகா படுகோன்:
இந்திய சினிமாவின் தீபிகா படுகோன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவருடைய நடிப்புக்கு மட்டுமல்ல, இவரின் அழகுக்கு மயங்கும் ரசிகர் கூட்டம் ஏராளம். பாலிவுட் நடிகையாக மட்டுமன்றி, உலக அரங்கில் பிரபலமான மாடலும் ஆவார்.இவர், பல விதமான உணவுகளை சமைத்துப் பார்க்க விருப்பம் உடையவராம். குறிப்பாக, தனது காதல் கணவர் ரன்வீர் சிங்கிற்காக பிரியாணி செய்வதும், விதவிதமான கேக்ஸ் பேக் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.இது தொடர்பான தகவலை இவர் இணையத்தில் அதிகம் பகிர்வாராம்.
ஐஸ்வர்யா ராய்:
முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், ஒரு காலத்தில் உலகமே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தவர். இவர், தென்னிந்திய இனிப்புகளை விரும்பி சாப்பிட மட்டுமல்லாமல், அற்புதமாக சமைப்பாராம். அதுமட்டுமின்றி, தன்னுடைய பூர்வீகமான மங்களூர்ஸ்டைல் பாரம்பரிய உணவுகளை தன் குடும்பத்தினருக்கும், குழந்தைக்கும் விரும்பி சமைத்துக் கொடுப்பாராம்.
ஷில்பா ஷெட்டி:
காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீருடன் அந்த நாளை தொடங்கும் ஷில்பா ஷெட்டி ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பாராம்.இவர், யோகா மற்றும் ஃபிட்னஸ் மூலம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர். இவர் உஉடலுக்கு ஆரோக்கியமான உணவுகளும் தேவை என்பதை தனது யூடியூப் சேனல் வழியாக தன்னுடைய ரசிகர்களுக்கு பகிர்ந்து கொள்கிறார். அதுமட்டுமின்று, ஃபிரஷ்ஷான பொருட்களை வைத்து சமைப்பது ஷில்பா ஷெட்டிக்கு மிகவும் விருப்பமானது.
கரிஷ்மா கபூர்:
90ஸ் கிட்ஸ் கனவு கன்னியாக இருந்த கரிஷ்மா கபூர். வட இந்திய பாரம்பரிய உணவானதால் டால் சாவல் முதல் சாக்கோ லாவா கேக்க வரை செய்து அசத்துவாராம். அதிகமாக வீட்டில் சமைத்த உணவை மிகவும் விரும்புபவராம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளையும், விதவிதமான கேக்ஸ் செய்து தருவதையும் விரும்பிச் செய்வாராம்.