Relationship: திருமணத்திற்கு பிறகு கள்ள உறவில் இருப்பவரா..? கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்...

By Anu Kan  |  First Published Jun 23, 2022, 11:47 AM IST

Relationship: இன்றைய நாளில் பெரும்பாலான தம்பதிகள் திருமணத்திற்கு பிறகு கள்ள உறவுகளில் இருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


திருமணத்தை பாரம்பரியமாக நம் மதத்தோடும், கலாச்சாரத்தோடும் தொடர்பு படுத்து அதனை ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் வழிவழியாக அழைக்கின்றனர்.  திருமணத்திற்கு புரிதல், மரியாதை, அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல் மற்றும் சமரசம் ஆகிய விஷயங்கள் முக்கியமானவை. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரின் உண்மையான அன்பிலும் உறவிலும் பல இடங்களில் விரிசல்தான் எட்டிப்பார்க்கிறதே தவிர, உயிர்த்துடிப்பு இல்லையென்றே சொல்லலாம். 

Tap to resize

Latest Videos

ஆகையால், பெரும்பாலானோரின் திருமண வாழ்கையில் வேறொரு உறவில் இருப்பதற்கு உங்களின் பிரச்சனைகள் தூண்டு கோலாக இருக்கிறது. இதனால், வேறொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, கள்ள உறவு ஏற்படுகிறது. கள்ள உறவு தம்பதிகளின் திருமண உறவை சீர்குலைக்கும்.  இந்த செயலால் உங்களால் ஏமாற்றப்படும் நபருக்கு, உணர்ச்சி ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் சோர்வாக இருக்கும்.

எதிர்பார்ப்பு பூர்த்தியடையாமல் இருப்பது:

திருமணம் செய்து கொள்ளும் ஆண் மற்றும் பெண் இப்படிதான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் எதிர் பார்க்கிறார்கள். தங்களுடைய திருமண வாழ்க்கை எப்படி நடத்தலாம், தனது கணவர் மற்றும் மனைவி தன்னிடம் எப்டியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என பல்வேறு கற்பனை கோட்டைகளை மனதில் கட்டி வைத்திருப்பார்கள். அந்த கோட்டை இடிந்து தரைமட்டம் ஆகும்போது,  வேறு ஒரு நபருடன் பழக ஆரம்பிக்கின்றனர். இப்படியாக கள்ள உறவு ஏற்படுகிறது.

கொடுமை படுத்துதல்:

தன்னுடைய துணையை கொடுமை படுத்துவது, சந்தேகப்படுவது போன்ற செயல்கள் அவர்களின் மன நிம்மதியை குழைத்து போடும். வாழ்க்கை வேதனைக்குள்ளாகும். அந்த வேதனையை வேறொரு நபருடன்  பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கின்றனர். மேலும் இதுபோன்ற சமயங்களில் தன் துணையிடம் இருந்து கிடைக்காத அன்பும், அக்கரையும் வேறுநபருடன் இருந்து கிடைக்கும் பட்சத்தில்,அவர்களுக்கு  கள்ள உறவில் ஈடுபட வழிவகுக்கும்.

நேரம் ஒதுக்காமல் இருப்பது..?

இன்றைய பிஸியான வாழ்கை முறையில் ஆண் -பெண் இருவரும் வேலையில் இருக்கிறார்கள். அலுவலகம் செல்லும் கணவன் -மனைவி உங்களுடைய வாழ்க்கை துணைக்காக நேரத்தை நீங்கள் செலவிட வேண்டும். நீங்கள் அதற்கான நேரத்தை அவர்களுக்கு வழங்காதபோது, அந்த நேரங்களில் வேறொரு நபரின் நட்பு உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். காலப்போக்கில் அந்த நட்பு கள்ள உறவாகவும் மாற வாய்ப்புள்ளது.

துணையின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் இருப்பது:

கணவன் -மனைவி ஒருவருக்கொருவர் உணர்வுகளை புரிந்துகொள்ளதாபோது, இருவருக்கும் ஒருவித வெறுப்பு ஏற்படுகிறது. அந்த சமயங்களில் அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வேறொரு நபரின் நட்பு காதலாக கூட மாற வாய்ப்புள்ளது.

உடலுறவில் திருப்பதி இல்லாமை:

உடலுறவில் திருப்தியின்மை காரணமாகதான் பெரும்பாலானோர் அதிகமாக கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்கிறது சில ஆய்வுகள். ஆண்களின் உணர்ச்சிகள் என்பது வேறு, பெண்களின் உணர்ச்சிகள் என்பது வேறு.  அதனை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அதிக அளவில் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள்.
 
 மேலும் படிக்க....Pregnancy Symptoms: மாதவிடாய் தள்ளிப்போகிறதா..? கர்ப்பமாக இருப்பதற்கான ஆரம்ப கால அறிகுறிகள்....

click me!