Honeymoon Travel: காதலை மட்டுமின்றி, திருமணத்தையும் கொண்டாட நீங்கள் தேன் நிலவு செல்ல விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
காதலை மட்டுமின்றி, திருமணத்தையும் கொண்டாடுவதற்காகவே தேன் நிலவு பயணங்கள் செல்லப்படுகின்றன. இவை உங்களுக்கு மறக்க முடியாத தருணத்தை நீங்கள் உருவாக்கலாம்.
நீங்கள் திருமணத்திற்கு பிறகு, தேன் நிலவு செல்ல விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவில் இருக்கும் ரொமாண்டிக் இடங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
கோவா:
சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் நாடாக கோவா இருப்பதால் வருடம் முழுவதும் ஆர்ப்பாட்டமும், கொண்டாட்டமுமாக இருக்கும். குறிப்பாக, கோவாவில் இந்த கால கட்டத்தில் பருவமழை நீடிக்கும். இந்த நேரத்தில், வெயில் குறைவாகவும், சாரல் மழையுடனும் வானிலை இனிமையாக இருக்கும். எனவே இந்த மாதங்களில் நீங்கள் கோவா சென்றால் ஒரு புதுவித அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். இங்குள்ள அழகான கடற்கரைகள் மட்டுமின்றி, கேண்டில் லைட் டின்னர்கள் உங்களுக்கு இனிமையான ரொமாண்டிக் அனுபவத்தை வழங்குகிறது.
உதய்பூர்:
ராஜஸ்தானில் உள்ள உதய்பூர், தேன் நிலவிற்கு சிறந்த தேர்வுகளுள் ஒன்றாகும். இந்தியாவின் புகழ்பெற்ற ஏரிகள் மற்றும் அரண்மனைகளால் மிகவும் பிரசித்தி பெற்ற நகரமாக உதய்பூர் அறியப்படுகிறது. சூரிய அஸ்தமனம் ஜோடிகளுக்கு மிகப் பிடித்தவையாகும். மேலும், இங்கு கிடைக்கும் உணவுகள் வெளிநாட்டவர்கள் மற்றும் இந்தியர்கள் இருவரும் நேசிக்கும் உணவாகும்.
அந்தமான் தீவுகள்:
உலகம் முழுவதும் இருந்தும் பல்வேறு காதல் ஜோடிகள் தங்கள் தேனிலவுக்கு அந்தமான் தீவிற்கு வருகை தருகின்றனர். இங்குள்ள ரொமான்டிக் தன்மையும், அட்வெஞ்சரின் மீதான பிரியமும் உங்கள் நினைவில் நீண்ட நாள்கள் வரை நீடிக்கும். இங்குள்ள கடற்கரைகள், ராதாநகர், ஹேவ்லாக் தீவு முதலான பகுதிகள் ஆகியவற்றின் இயற்கை எழில் கொஞ்சும் அழகு நிறைந்திருக்கும்.
எனவே, மேற்சொன்ன இடஙக்ளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேன் நிலவு செல்ல சிறந்த இடமாக தேர்ந்தெடுத்து சென்று வாருங்கள். இந்த நாள் உங்களுக்கு மறக்க முடியாத இனிய நாளாக இருக்க வாழ்த்துக்கள்!