Diabetic Health tips: சுகரை நினைத்து பயந்தால் இதுதான் பிரச்சனை...டெஸ்ட் அவசியம்..மருத்துவ நிபுணர்கள் அறிவுரை!

By Anu KanFirst Published May 13, 2022, 2:53 PM IST
Highlights

Diabetic Health tips: எனக்கு சுகர் இருக்குமா? என்ற பயத்துடன் மருத்துவமனைக்கு சென்று டெஸ்ட் எடுத்தால் சுகர் அதிகமாக இருக்கும் என்று மருத்து நிபுணர்கள் கூறுகின்றனர். 

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்பது உடலின் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யவோ அல்லது பயன்படுத்தவோ இயலாமையால் வகைப்படுத்தப்படும் ஒரு நாள்பட்ட நிலை. இது பல காரணிகளால் இருக்கலாம். இதற்கு முக்கிய காரணம் நம்முடைய உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, உடல் உழைப்பில்லாமை போன்றவையாகும். 

நீரழிவு நோய்:

இவை நமக்கு நீரழிவு நோய் போன்ற பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளை வழங்குகிறது. மேலும், சர்க்கரை நோய்,  இதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்களை ஏற்படுத்தக் கூடியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கூட கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இவற்றை தவிர்ப்பதற்கு நாம் சில சில பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது அவசியம்.  

கோடைக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவுகள்:

குறிப்பாக மாவுச் சத்து குறைவாக உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், பயறுகள், பீன்ஸ், கொழுப்பு குறைவாக உள்ள பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் இவற்றுள் அடங்கும்.  இருப்பினும்,வெள்ளை சக்கரை மற்றும் மற்ற மாவு சார்ந்த பதார்த்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று மருத்து நிபுணர்கள் கூறுகின்றனர். 

பரிசோதனை அவசியம், பயம் தேவையில்லை:

இருப்பினும், எனக்கு சுகர் இருக்குமா? என்ற பயத்துடன் மருத்துவமனைக்கு சென்று டெஸ்ட் எடுத்தால் சுகர் உயரும் வாய்ப்பு அதிகம். இருப்பினும், டெஸ்டின் முடிவில் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், அவற்றை நினைத்து நீங்கள் பயன்பட வேண்டாம். ஏனெனில், மனிதனுக்கு இயற்கையாகவே, ரத்த அழுத்தம் சுகர் போன்றவை ஏறி இறங்கும். முடிந்த வரை பதற்றம் இல்லாமல் அவற்றை கட்டுக்குள் வைத்திருங்கள் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

மேலும் படிக்க....Summer Tips: கொளுத்தும் வெயிலால் முகக்கருமையா..? சருமத்தை பாதுகாக்க நச்சுனு நாலு வீட்டு வைத்திய குறிப்புகள்...

click me!