Love break ups: பணியிடத்தில் நிகழும் காதல் பிரேக்கப்பை நீங்கள் கடந்து செல்ல வேண்டிய ஈஸியான வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
மனத்துக்குப் பிடித்த ஒருவருடன் நேரம் செலவிடுவது இதமாக இருக்கிறது. ஒருவரின் வாழ்வில் அன்பான துணை, காதல், ரொமான்ஸ் இல்லாவிட்டால் அந்த வாழ்க்கை திருப்திகரமாக இருக்காது. எல்லா உறவுகளும் அப்படித் தொடர்வதில்லை. சில உறவுகள் முறிந்துபோகின்றன. ஒவ்வொரு காதலும் திருமணத்தில் முடிவதில்லை. சில காதல்கள் தோல்வியை தழுவுகிறது. முதன் முதலாக இந்த முறிவைச் சந்திக்கிற ஒருவர் மிகவும் வருத்தமாக இருக்கும். எனவே,பணியிடத்தில் நிகழும் காதல் பிரேக்கப்பை நீங்கள் கடந்து செல்ல வேண்டிய ஈஸியான வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
தொலைபேசி அழைப்பு..?
உங்கள் காதலியை அழைப்பது உங்கள் காதலியின் தொலைபேசி எண் உங்களிடம் இருக்கும். எனவே, முறிவு ஏற்பட்ட பின்னர் அவர்கள் தொலைபேசி எண்ணை முதலில் உங்கள் தொலைபேசியில் இருந்து அழித்து விடுங்கள்.இல்லையெனில், தொடர்பு கொள்ள உங்களை தூண்டும்.
புத்தகம் படிக்கலாம்:
நீங்கள் ஒரு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவர் என்றால் வாசிக்கும் பழக்கத்தை சில வருடங்களாக மறந்துவிட்டீர்கள் என்றால் அந்த பழக்கத்தை மீண்டும் தொடருங்கள். ஏனென்றால், புத்தக வாசிப்பு நம்மை ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் உடையது. புத்தகங்களை வாசிப்பது அது மிகவும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான செயல்களில் ஒன்றாகும்.
தனிமையாக இருப்பது...
காதல் முறிவிற்கு பிறகு தனிமையில் நேரத்தை கழித்தால், அது பிரச்சனையை தான் உண்டாக்கும். அவர்களை நினைப்பது மட்டுமல்லாது, அவர்களை பார்க்க முயற்சி செய்வீர்கள், அவர்கள் நினைவில் இருக்கும் பொருட்களை பார்ப்பீர்கள். அதனால் தனிமையை தவிர்க்கவும்.
உடற்பயிற்சி:
உங்கள் உடற்பயிற்சி, உங்கள் மூளையை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. இவை உங்களுக்கு ஓய்வெடுக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். எனவே, உடற்பயிற்சி, சைக்கிள், பயிற்சி, யோகா மற்றும் நடைபயிற்ச்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
நீங்கள் சந்திக்கும் அடுத்த நபரை காதலிக்க ஆரம்பிக்குதல்..?
காதல் முறிவு ஏற்பட்ட பின் மற்றொரு நபரின் இனிமையான பேச்சுக்கும், மயக்கும் செயலுக்கும், அவர்களின் மீது காதல் பிறக்கலாம். ஆனால் இது செய்யக்கூடாத ஒன்றாகும். மீண்டும் ஒரு முறை காதலில் விழுவது, முக்கியமாக காதல் முறிவு ஏற்பட்ட உடனேயே என்பது செய்யக்கூடாத பெரும் தவறாகும்.