பாகிஸ்தான், நியூசிலாந்த பாருங்க.. நீங்களும்தான் இருக்கீங்களே!! இந்திய அணியை தெறிக்கவிட்ட முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Apr 5, 2019, 5:04 PM IST
Highlights

உலக கோப்பை மே மாத இறுதியில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடர் நடந்துவருகிறது. ஐபிஎல்லில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாது மற்ற நாட்டு வீரர்களும் ஆடிவருகின்றனர். 
 

உலக கோப்பை மே மாத இறுதியில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடர் நடந்துவருகிறது. ஐபிஎல்லில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாது மற்ற நாட்டு வீரர்களும் ஆடிவருகின்றனர். 

மே 12ம் தேதி ஐபிஎல் தொடர் முடிகிறது; மே 30ம் தேதி உலக கோப்பை தொடர் தொடங்குகிறது. உலக கோப்பைக்கு முன் ஐபிஎல்லில் ஆடுவது வீரர்களுக்கு பளுவை அதிகரிக்கும் என்ற கருத்து இருந்தது. அதற்காக வீரர்கள் வீட்டிற்குள்ளும் உட்கார்ந்திருக்க முடியாது. 

ஆனால் ஐபிஎல்லுக்கு முன்னதாகவாவது சிறிது ஓய்வு இருந்திருக்க வேண்டும். இந்திய அணிக்கு அப்படி நடக்கவில்லை. இங்கிலாந்து தொடர், ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், நியூசிலாந்து சுற்றுப்பயணம், பின்னர் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தது என தொடர்ச்சியாக இந்திய வீரர்கள் கிரிக்கெட் ஆடியுள்ளனர். கோலிக்கும் பும்ராவிற்கும் அவ்வப்போது ஓய்வளிக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் உட்பட இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் தொடர்ந்து ஆடிக்கொண்டே தான் இருந்தார்கள். 

தொடர்ந்து ஆடிவிட்டு, ஐபிஎல்லிலும் ஆடுவதால் வீரர்களால் உலக கோப்பைக்கு ஃப்ரெஷ்ஷாக செல்ல முடியாது என்று முன்னாள் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இந்திய அணிக்கு ஐபிஎல் தான் மிகப்பெரிய பின்னடைவு. இந்திய வீரர்கள் ஏற்கனவே போதுமான அளவு கிரிக்கெட் ஆடியுள்ளார்கள். வெஸ்ட் இண்டீஸ் தொடரெல்லாம் அவசியமே இல்லாத ஒன்று. ஆனால் அதிலும் வீரர்கள் ஆடினார்கள். தொடர்ந்து ஆடிவிட்டு இப்போது ஐபிஎல்லிலும் ஆடுகிறார்கள். ஒரு வீரர் தான் அன்ஃபிட் என்றோ சோர்வடைந்துவிட்டதாகவோ கூறமுடியாது. தொடர்ந்து ஆடினாலும் உடற்தகுதியை நன்றாக வைத்துக்கொண்டு சமாளித்து ஆடித்தான் ஆக வேண்டும். ஆனால் பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு போதுமான ஓய்வு இருந்திருக்கிறது. அதனால் அவர்கள் உலக கோப்பைக்கு உடலளவிலும் மனதளவிலும் ஃப்ரெஷ்ஷாக செல்வார்கள். அந்த மாதிரியான விஷயங்களில் நாம் இன்னும் மேம்பட வேண்டும் என்று ரோஜர் பின்னி அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 

click me!