நான் மேட்ச் ஜெயிக்கிறத பத்தி நினைப்பேனா.. இல்ல இத பத்தி நினைப்பேனா!! அது ரொம்ப தப்புங்க.. முதன்முதலாய் வாய் திறந்த பட்லர்

By karthikeyan VFirst Published Apr 5, 2019, 2:59 PM IST
Highlights

அந்த போட்டியில் பட்லர் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார். 185 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்ததோடு பெரிய இன்னிங்ஸை நோக்கி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார் பட்லர்.

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் கடும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய சம்பவம் என்றால், அது மன்கட் ரன் அவுட்டுதான். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார் அஷ்வின். 

அஷ்வின் அப்படி செய்தது கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டே அஷ்வின் செயல்பட்டதால் அதில் தவறு ஏதும் இல்லை என்று அஷ்வினுக்கு ஆதரவுக்குரல்கள் எழுந்த நிலையில், ஆட்டத்தின் ஸ்பிரிட்டை கெடுக்கும் விதமான செயல் என்ற எதிர்ப்புக்குரல்களும் வலுவாக இருந்தன.

அந்த போட்டியில் பட்லர் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார். 185 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்ததோடு பெரிய இன்னிங்ஸை நோக்கி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார் பட்லர். 69 ரன்கள் குவித்த அவரை மன்கட் முறையில் அஷ்வின் ரன் அவுட்டாக்கியதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. பட்லரின் விக்கெட்டுக்கு பிறகு ராஜஸ்தான் அணியை சரித்த பஞ்சாப் அணி, 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அஷ்வின் செய்த மன்கட் ரன் அவுட் குறித்து பலவிதமான கருத்துகள் உலாவந்த போதிலும் அதனால் பாதிக்கப்பட்ட பட்லர் கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பட்லர், அந்த நேரத்தில் நான் உண்மையாகவே மிகுந்த ஏமாற்றமடைந்தேன். அந்த ஸ்டைலை நான் விரும்பவில்லை. அந்த நேரத்தில் போட்டியை எப்படி ஜெயிப்பது என்று நினைப்பேனா? அல்லது நான் ஸ்டிரைக்கர் முனையில் நிற்பது குறித்து நினைப்பேனா என தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். 
 

click me!