விராட் கோலி படுமோசமா சொதப்ப இதுதான் காரணம்.. அவரு கண்டிப்பா அதை மாற்றியே ஆகணும்!! விவிஎஸ் லட்சுமணன் அதிரடி

By karthikeyan VFirst Published Apr 5, 2019, 1:25 PM IST
Highlights

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் ஜொலித்துவரும் கோலிக்கு ஐபிஎல் தான் சிம்மசொப்பனமாக திகழ்கிறது. இதுவரை ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் கண்டது. ஆனால் இந்த சீசன் கடந்த சீசன்களை விட மோசமாக அமைந்துள்ளது. இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

ஆர்சிபி அணி தோல்விகளை சந்தித்தாலும் விராட் கோலியின் ஆட்டத்தில் குறையிருக்காது. ஆனால் இந்த சீசனில் விராட் கோலியும் சோபிக்கவில்லை. தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவருகிறார். குறிப்பாக ரிஸ்ட் ஸ்பின்னர்களிடம் சரணடைந்துவிடுகிறார். 

இந்நிலையில், விராட் கோலி சரியாக ஆடாதது குறித்து கருத்து தெரிவித்துள்ள சன்ரைசர்ஸ் அணியின் ஆலோசகர் விவிஎஸ் லட்சுமணன், விராட் கோலி ரிஸ்ட் ஸ்பின்னர்களிடம் ஆட்டமிழக்கிறார். குறிப்பாக கூக்ளி பந்தில் விழுந்துவிடுகிறார். கடந்த சீசனில் கூட முஜீபுர் ரஹ்மான், ஆடம் ஸாம்பா, மார்கண்டே ஆகியோரிடம் விக்கெட்டை இழந்தார். ஏற்கனவே அவரை வீழ்த்தியுள்ள ஷ்ரேயாஸ் கோபால் இந்த சீசனிலும் கோலியை வீழ்த்தினார். எனவே ரிஸ்ட் ஸ்பின்னில் திணறும் கோலி, ரிஸ்ட் ஸ்பின்னை சிறப்பாக எதிர்கொள்ள கூடுதல் பயிற்சி எடுத்து அதையும் சிறப்பாக ஆட முனைய வேண்டும் என லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

தனது பேட்டிங்கில் இருக்கும் குறைகளை எல்லாம் பயிற்சியின் மூலம் களைந்து ஜொலித்துவரும் விராட் கோலிக்கு இது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது. தீவிர பயிற்சி எடுத்து விரைவில் ரிஸ்ட் ஸ்பின்னர்களை வெளுத்துவாங்கத்தான் போகிறார். 

click me!