என்னதான் இருந்தாலும் நீ சின்ன பையன் தம்பி.. பிரித்வி ஷாவை தெறிக்கவிட்ட புவனேஷ்வர் குமார்.. வீடியோ

Published : Apr 05, 2019, 10:54 AM IST
என்னதான் இருந்தாலும் நீ சின்ன பையன் தம்பி.. பிரித்வி ஷாவை தெறிக்கவிட்ட புவனேஷ்வர் குமார்.. வீடியோ

சுருக்கம்

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி அபாரமாக ஆடி ஆதிக்கம் செலுத்திவருகிறது.   

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி அபாரமாக ஆடி ஆதிக்கம் செலுத்திவருகிறது. 

நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி, 20 ஓவர் முடிவில் வெறும் 129 ரன்களை மட்டுமே எடுத்தது. 

130 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ, வழக்கம்போலவே தொடக்கம் முதலே அடித்து ஆடினார். பேர்ஸ்டோவின் அதிரடியால் பவர்பிளேயிலேயே சன்ரைசர்ஸ் அணி 60 ரன்களை குவித்துவிட்டது. எஞ்சிய 14 ஓவர்களில் வெறும் 70 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவை என்பதால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியபோதும், 19வது ஓவரில் இலக்கை எட்டி சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

மும்பைக்கு எதிரான முதல் போட்டியிலும் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரிலும் வெற்றி பெற்ற டெல்லி அணி, மூன்று தோல்விகளை பெற்றுள்ளது. பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இளம் வீரர்களுடன் தவான், கோலின் இங்கிராம் ஆகியோரை அணியில் எடுத்து இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 

கேகேஆர் அணிக்கு எதிராக அபாரமாக ஆடி 99 ரன்கள் குவித்த பிரித்வி ஷாவை, அருமையான பந்தை வீசி கிளீன் போல்டாக்கி வெறும் 11 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் புவனேஷ்வர் குமார். பிரித்வி ஷா அபாயகரமான வீரர். அசால்ட்டாக சில ஷாட்டுகளை அடித்து ஸ்கோரை மளமளவென உயர்த்தக்கூடியவர். அவரை வெறும் 11 ரன்களில் கிளீன் போல்டாக்கினார் புவனேஷ்வர் குமார்.  அந்த பந்து அருமையாக வீசப்பட்ட பந்து. அந்த வீடியோ இதோ.. 

PREV
click me!

Recommended Stories

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்