ஐபிஎல் அணிகள் பண்றது கொஞ்சம் கூட சரியில்ல.. ஆதாரத்துடன் பாயிண்டை புடிச்சு தெறிக்கவிட்ட முகமது கைஃப்

By karthikeyan VFirst Published Apr 4, 2019, 4:43 PM IST
Highlights

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் நடந்துவரும் ஒரு விஷயத்தை சரியாக கண்டுபிடித்து ஐபிஎல் அணிகள் மீது கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார் முகமது கைஃப்.
 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் நடந்துவரும் ஒரு விஷயத்தை சரியாக கண்டுபிடித்து ஐபிஎல் அணிகள் மீது கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார் முகமது கைஃப்.

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத பஞ்சாப், டெல்லி, பெங்களூரு அணிகள் இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆடிவருகின்றன. இந்த அணிகளில் பஞ்சாப் அணிதான் 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி ஓரளவிற்கு நன்றாக ஆடிவருகிறது. பெங்களூரு அணி ஆடிய 4 போட்டியிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

இந்த சீசனில் எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற நோக்கில், டெல்லி அணி ஏற்கனவே பாண்டிங் தலைமை பயிற்சியாளராக உள்ள நிலையில், கங்குலியை ஆலோசகராக நியமித்துள்ளது. முகமது கைஃப் துணை பயிற்சியாளராக உள்ளார். 

இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள டெல்லி அணி, 2ல் வெற்றியும் 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் அணிகள் காயமடைந்த வீரருக்கு பதிலாக மாற்று வீரரை ஃபீல்டிங் செய்ய அனுமதிக்கும் வசதியை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

காயமே அடைந்திராத, ஆனால் சரியாக ஃபீல்டிங் செய்யாத வீரர்களை அனுப்பிவிட்டு ஆடும் லெவனில் இல்லாத நல்ல ஃபீல்டரை ஃபீல்டிங்கிற்கு மட்டும் பயன்படுத்துவதாக கைஃப் குற்றம்சாட்டியுள்ளார். பஞ்சாப் அணி சர்ஃபராஸ் கானுக்கு பதிலாக கருண் நாயரை ஃபீல்டிங்கிற்கு பயன்படுத்துவதையும் கேகேஆர் அணி, பியூஸ் சாவலுக்கு பதிலாக ரிங்கு சிங்கை பயன்படுத்துவதையும் குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளார் கைஃப். வீரர்களுக்கு காயமே ஏற்படாதபோதும் அவர்களை அனுப்பிவிட்டு நல்ல ஃபீல்டர்களை களத்தில் இறக்குகின்றனர் என்று கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். 

click me!