சொற்ப ரன்களுக்கு சுருண்டது ஆர்சிபி.. சன்ரைசர்ஸுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு

By karthikeyan VFirst Published Nov 6, 2020, 9:43 PM IST
Highlights

ஆர்சிபி அணி 20 ஓவரில் வெறும் 131 ரன்களுக்கு சுருண்டதால், சன்ரைசர்ஸ் அணிக்கு இலக்கு எளிதாக அமைந்துள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசனின் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி தொடக்க வீரராக இறங்கி, 2வது ஓவரிலேயே ஆறு ரன்களில் ஆட்டமிழந்தார். படிக்கல் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஃபின்ச்சும் டிவில்லியர்ஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். ஆனால் அவர்களை அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்யவிடாமல் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தனர் சன்ரைசர்ஸ் பவுலர்கள்.

ஃபின்ச் 32 ரன்களில் அவுட்டாக, மொயின் அலி ரன்னே அடிக்காமல் ரன் அவுட்டாக, ஷிவம் துபே 8 ரன்களுக்கும் சுந்தர் ஐந்து ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய டிவில்லியர்ஸ் அரைசதம் அடித்தார். ஆனால் அவர் டெத் ஓவரில் நிலைத்து நின்று அடித்து ஆடவிடாமல் நடராஜன், 18வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஐம்பத்தாறு ரன்களுக்கு வீழ்த்த, 20 ஓவரில் ஆர்சிபி அணி வெறும் 131 ரன்கள் மட்டுமே அடித்தது.

132 ரன்கள் என்ற எளிய இலக்கை சன்ரைசர்ஸ் அணி விரட்டிவருகிறது. அது எளிதான இலக்கு என்பதால் சன்ரைசர்ஸுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
 

click me!