#MIvsDC ரன்னே அடிக்காமல் 3 விக்கெட்டை இழந்த டெல்லி கேபிடள்ஸ்; முதல் ஓவரிலேயே உறுதியான மும்பையின் வெற்றி வீடியோ

By karthikeyan VFirst Published Nov 5, 2020, 10:23 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் 201 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணி, ரன்னே அடிக்காமல் 3 விக்கெட்டுகளை இழந்தது.
 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டி துபாயில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 200 ரன்களை குவித்தது. ரோஹித் சர்மா மற்றும் பொல்லார்டு ஆகிய இருவரும் டக் அவுட்டானாலும், இஷான் கிஷன், டி காக், சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான பேட்டிங்கால் 200 ரன்களை குவித்தது மும்பை அணி. 

அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 25  பந்தில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு டி காக்கும் சூர்யகுமாரும் இணைந்து 62 ரன்களை குவித்தனர். அடித்து ஆடி அரைசதம் அடித்த சூர்யகுமார் 38 பந்தில் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  அதன்பின்னர் இஷான் கிஷனும் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து டெல்லி கேபிடள்ஸின் பவுலிங்கை பொளந்து கட்டிவிட்டனர். இஷான் கிஷன் 30 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 55 ரன்களை விளாச, பாண்டியா 14 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசினார். 20 ஓவரில் 200 ரன்களை குவித்தது மும்பை அணி.

201 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா மற்றும் ரஹானே ஆகிய இருவரையும் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் போல்ட். பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் தவானை டக் அவுட்டாக்க, ரன்னே அடிக்காமல் 3 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி அணி.

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் 12 ரன்களுக்கும் ரிஷப் பண்ட் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 8 ஓவரில் வெறும் 41 ரன்களுக்கே ஐந்து விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது டெல்லி அணி.
 

click me!