#MIvsDC டெல்லி கேபிடள்ஸுக்கு சாதகமான டாஸ்.. ஷ்ரேயாஸ் ஐயரின் சரியான முடிவு.. வெற்றி யாருக்கு..?

By karthikeyan VFirst Published Nov 5, 2020, 7:26 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 13வது சீசனின்  முதல் தகுதிச்சுற்று போட்டி இன்று நடக்கிறது. புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடக்கிறது.  டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

துபாயில் நடந்த கடைசி 26 போட்டிகளில் 20 போட்டிகளில், 2வது பேட்டிங் செய்த அணி தான் வென்றிருக்கிறது. அதற்கு காரணம், பனி. 2வது இன்னிங்ஸில் பனி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், பவுலர்களுக்கு சவாலாக இருக்கும்; அதுவே பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.

அந்தவகையில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன், மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். துபாய் கண்டிஷன் மற்றும் பனி ஆகியவற்றை ஓவர்டேக் செய்து வெல்லுமளவிற்கான வலுவான அணி மும்பை இந்தியன்ஸ். 

வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட மும்பை அணியால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியும். பனியின் தாக்கத்தை மீறி பந்துவீசுமளவிற்கான உலகத்தரம் வாய்ந்த பவுலிங் யூனிட்டும் மும்பை இந்தியன்ஸிடம் உள்ளது என்பதால், டெல்லி கேபிடள்ஸுக்கு இலக்கை விரட்டுவது எளிதாக இருக்காது.

இந்த போட்டியில் வெல்லும் அணி, நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணிக்கும் இறுதி போட்டிக்கான வாய்ப்புள்ளது. தோற்கும் அணி, எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணியுடன் 2வது தகுதிச்சுற்று போட்டியில் மோதும். அதில் ஜெயித்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பொல்லார்டு, ராகுல் சாஹர், நேதன் குல்ட்டர்நைல், போல்ட், பும்ரா.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேனியல் சாம்ஸ், அக்‌ஷர் படேல், அஷ்வின், ரபாடா, நோர்க்யா.
 

click me!