ரோஹித்தையும் மும்பை இந்தியன்ஸ் அணியையும் கடுமையாக விளாசிய சேவாக்

By karthikeyan VFirst Published Nov 3, 2020, 2:10 PM IST
Highlights

காயத்தால் தவித்துவரும் ரோஹித்தையும், ஐபிஎல்லில் அவர் ஆடிவரும் மும்பை இந்தியன்ஸ் அணியையும் கடுமையாக விளாசியுள்ளார் சேவாக்.
 

ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து, முதல் அணியாக கெத்தாக பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற 4 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் ஆடவில்லை.

ரோஹித்தின் காயத்தை சுட்டிக்காட்டி, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் அவர் எடுக்கப்படவில்லை. இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட மாத்திரத்திலேயே, அவர் வலையில் பயிற்சி செய்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்தது மும்பை அணி.

ரோஹித்துக்கு காயம் என்றால், பிறகு எப்படி பயிற்சி செய்கிறார்? அப்படியென்றால் அது என்ன மாதிரியான காயம்? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. ரோஹித்தின் உடற்தகுதி அப்டேட்டை தெரிந்துகொள்ள ரசிகர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் உண்மையை தெரிவிக்க வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியிருந்தார். 

ரோஹித்தின் ஃபிட்னெஸ் கண்காணிக்கப்பட்டுவருவதாக தேர்வாளர்கள் மட்டுமல்லாது பிசிசிஐ தலைவர் கங்குலியும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரோஹித் குறித்து கிரிக்பஸ் இணையதளத்தில் பேசிய சேவாக், ரோஹித் சர்மாவின் ஃபிட்னெஸ் குறித்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் தெளிவடைய, ஊடகங்கள் கேள்வியெழுப்ப வேண்டும். ரோஹித் சர்மா காயத்தால் அவதிப்படுகிறார் என்றால் விரைவில் குணமடைய, அவர் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும். அதைவிடுத்து ஒவ்வொரு போட்டிக்கும் ஸ்டேடியத்தில் டக் அவுட்டில் வந்து உட்கார்ந்திருக்கிறார் என்று ரோஹித்தை விமர்சித்த சேவாக், மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித்தின் ஃபிட்னெஸ் குறித்த அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

click me!