மத்தவங்கள நம்பி பிரயோஜனமில்ல.. பொல்லார்டின் அதிரடி முடிவுதான் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணம்

Published : Apr 11, 2019, 04:47 PM IST
மத்தவங்கள நம்பி பிரயோஜனமில்ல.. பொல்லார்டின் அதிரடி முடிவுதான் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணம்

சுருக்கம்

198 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் குயிண்டன் டி காக், ரோஹித்துக்கு பதில் களமிறங்கிய சித்தேஷ் லத், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் என யாருமே சோபிக்கவில்லை. 12 ஓவருக்கு 94 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது மும்பை இந்தியன்ஸ்.   

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த சீசனில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றிலும் மிகச்சிறந்த பரபரப்பான போட்டியாக அமைந்தது. 

காயம் காரணமாக ரோஹித் சர்மா ஆடாததால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்பட்டார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி, 197 ரன்களை குவித்தது. 198 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டு தனி ஒருவனாக களத்தில் நின்று அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 83 ரன்களை குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

198 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் குயிண்டன் டி காக், ரோஹித்துக்கு பதில் களமிறங்கிய சித்தேஷ் லத், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் என யாருமே சோபிக்கவில்லை. 12 ஓவருக்கு 94 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது மும்பை இந்தியன்ஸ். 

வழக்கமாக 6 அல்லது 7ம் வரிசையில் இறங்கும் பொல்லார்டு, இந்த போட்டியில் இஷான் கிஷானுக்கு முன்னதாகவே 4ம் வரிசையில் பொல்லார்டு களத்திற்கு வந்துவிட்டார். இஷான் கிஷான் விக்கெட்டுக்கு பிறகு பொல்லார்டுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். 

8வது ஓவரிலேயே பொல்லார்டு களத்திற்கு வந்துவிட்டார். இலக்கு பெரிது என்பதால் கடைசி நேரத்தில் அதிகமான ரன்கள் தேவைப்பட்டால் சிரமமாகிவிடும். அதனால் மிடில் ஓவர்களில் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது மும்பை இந்தியன்ஸ். அந்த நேரத்தில் தான் இறங்கினால் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து வழக்கத்திற்கு மாறாக 4ம் வரிசையில் களமிறங்கிய பொல்லார்டு, 8வது ஓவரிலேயே களத்திற்கு வந்தார். 11வது ஓவரிலிருந்தே அடித்து ஆட தொடங்கிவிட்டார். அதனால்தான் 198 ரன்களை விரட்டுவது சாத்தியப்பட்டது. இல்லையெனில் மிடில் ஓவரில் மந்தமாக ஆடியிருந்தால், கடைசி நேரத்தில் மிகவும் கடினமாகியிருக்கும். ஹர்திக் பாண்டியா 19 ரன்களில் ஆட்டமிழந்தாலும் கூட, தனி ஒருவனாக போட்டியை வென்று கொடுத்தார் பொல்லார்டு. 

பேட்டிங்கில் மட்டுமல்லாமல் கேப்டனாகவும் அசத்திவிட்டார் பொல்லார்டு. 
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்