ரோஹித் சர்மாவுக்கு என்ன ஆச்சு..? ஹிட்மேனின் காயம் குறித்த அப்டேட்

By karthikeyan VFirst Published Apr 11, 2019, 4:11 PM IST
Highlights

பஞ்சாப்புக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பயிற்சியின்போது ரோஹித் சர்மாவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடந்துவருகிறது. 3 முறை சாம்பியனும் ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியுமான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தோல்வியுடன் இந்த சீசனை தொடங்கினாலும் பின்னர் தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது. 

டெல்லி கேபிடள்ஸ் அணியிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபியை வீழ்த்தி வென்றது. பின்னர் பஞ்சாப்பிடம் தோற்றது. எனினும் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ், நேற்று பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் அந்த அணியை கடைசி பந்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. 

இதன்மூலம் 8 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது. பஞ்சாப்புக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பயிற்சியின்போது ரோஹித் சர்மாவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. ஐபிஎல்லுக்கு அடுத்து உலக கோப்பை இருப்பதால், இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா உடற்தகுயுடன் இருப்பது அவசியம். அதனால் ரோஹித்தின் காயம் அச்சத்தை ஏற்படுத்தியது. எனினும் சிறிய காயம் தான் என்பதால், முன்னெச்சரிக்கையாக பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா ஆடவில்லை. அவருக்கு பதிலாக பொல்லார்டு கேப்டனாக செயல்பட்டார். 

பஞ்சாப்புக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் பேசிய பொல்லார்டு, ரோஹித் சர்மாவிற்கு முன்னெச்சரிக்கையாக இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஒரு போட்டியில் மட்டும்தான் ஓய்வளிக்கப்பட்டதாகவும் அடுத்த போட்டியில் ரோஹித் சர்மா ஆடுவார் என்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் ரோஹித் சர்மா ஆட உள்ளார். அவருக்கு பெரிய காயம் இல்லை என்பது ரசிகர்களுக்கும் இந்திய அணிக்கும் நற்செய்தி. 
 

click me!