கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பந்தாடிய தோனி டீம் !! சிஎஸ்கே அபார வெற்றி !!

By Selvanayagam PFirst Published Apr 10, 2019, 12:19 AM IST
Highlights

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை விழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 

ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக இருந்தது.  இதனால் கொல்கத்தா அணியினர் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அந்த அணியில் ராபின் உத்தப்பா 11 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 19 ரன்னிலும் அவுட்டாகினர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இறுதியில், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. ஆண்ட்ரு ரசல் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடி அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னை அணி சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டும், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

பின்னர் 109 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சென்னை அணி பேட் செய்தது. தொடக்க வீரர்களாக வாட்சனும், டு பிளிசிஸ்சும் ஆடினர். வாட்சன் 17 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த வந்த ரெய்னா 14 ரன்னில் வெளியேறினார். அப்போது சென்னை அணியின் ஸ்கோர் 35 ரன்னாக இருந்தது. 

அதன் பின் வந்த ராயுடு, டு பிளிசிஸ்சுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். ராயுடு 21 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜாதவ், டு பிளிசிஸ்சுடன் இணைந்து ஆடினார். 17.2  ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டை இழந்து 111 ரன் எடுத்து வெற்றி பெற்றது. டு பிளிசிஸ் சிறப்பாக ஆடி 43 ரன் எடுத்தார்

click me!