பென் ஸ்டோக்ஸை கவர்ந்த 3 இளம் இந்திய வீரர்கள்.. சத்தியமா இந்த லிஸ்ட்ல ரிஷப் பண்ட் இல்ல.. வேற யாரு யாருனு பாருங்க

By karthikeyan VFirst Published Apr 8, 2019, 4:40 PM IST
Highlights

ஐபிஎல் 2008ம் ஆண்டு முதல் நடந்துவருகிறது. தற்போது நடந்துவருவது 12வது சீசன். 11 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 
 

ஐபிஎல் 2008ம் ஆண்டு முதல் நடந்துவருகிறது. தற்போது நடந்துவருவது 12வது சீசன். 11 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 

ஐபிஎல்லின் மூலம் அடையாளம் காணப்பட்ட இளம் இந்திய வீரர்கள் பலர். ஜடேஜா, மனீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், பும்ரா, பாண்டியா பிரதர்ஸ், நிதிஷ் ராணா, சூர்யகுமார் யாதவ் என நீண்ட பட்டியலே உள்ளது. இவ்வாறு ஐபிஎல் தொடங்கியது முதல் பல இளம் திறமைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிவரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி ஆகிய மூன்று இளம் இந்திய வீரர்களின் ஆடுவதை பார்க்க தனக்கு ரொம்ப பிடிக்கும் என டுவீட் செய்துள்ளார். 

பிரித்வி ஷா ஐபிஎல்லுக்கு முன்னதாகவே அடையாளம் காணப்பட்டவர் என்றாலும் அவரது பேட்டிங் திறமை அபாரமானது. இயற்கையாகவே மிகச்சிறந்த பேட்டிங் திறமை கொண்டவர். சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி ஆகிய இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிவருகின்றனர். 

பென் ஸ்டோக்ஸின் டுவீட்டை பார்த்த மற்றொரு இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், ரிஷப் பண்ட்டை விட்டுவிட்டீர்களே என்கிற ரீதியாக பதில் டுவீட் செய்துள்ளார். ஒருவேளை ரிஷப் பண்ட்டை விட பிரித்வி, சாம்சன், திரிபாதி ஆகியோரின் ஆட்டத்தை பார்க்கத்தான் ஸ்டோக்ஸிற்கு பிடித்திருக்கும். அதனால் போட்டிருப்பார்; தெரியாமல் ரிஷப் பண்ட்டின் பெயரை விட்டிருக்க வாய்ப்பில்லை. 
 

click me!