தோனி என் மேல கோபப்பட்டு திட்டுனாரு.. ஆனால் அப்புறமா என்ன பண்ணாரு தெரியுமா..? அதுதான் தோனி.. தீபக் சாஹர் பகிரும் சுவாரஸ்யம்

By karthikeyan VFirst Published Apr 8, 2019, 5:09 PM IST
Highlights

தோனி பொதுவாக களத்தில் கோபப்படமாட்டார். இக்கட்டான சூழல்களிலும் வீரர்களை நிதானமாகவும் பொறுமையாகவும் கையாள்வார். அதனாலேயே மிஸ்டர் கூல், கேப்டன் கூல் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். 
 

தோனி பொதுவாக களத்தில் கோபப்படமாட்டார். இக்கட்டான சூழல்களிலும் வீரர்களை நிதானமாகவும் பொறுமையாகவும் கையாள்வார். அதனாலேயே மிஸ்டர் கூல், கேப்டன் கூல் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். 

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், தீபக் சாஹரை கோபப்பட்டு திட்டிவிட்டார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர் முடிவில் 160 ரன்களை எடுத்தது. 

161 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் மற்றும் மயன்க் அகர்வாலை தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார் ஹர்பஜன் சிங். பவர்பிளேயிலேயே கெய்ல் மற்றும் அகர்வாலை வீழ்த்திவிட்டார். அதன்பின்னர் ராகுலும் சர்ஃபராஸ் கானும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். ஆனால் 18வது ஓவரில் ராகுலும் 19வது மில்லரும் கடைசி ஓவரில் சர்ஃபராஸும் ஆட்டமிழந்ததால் அந்த அணி 138 ரன்களை மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

அந்த போட்டியில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவை. அந்த சூழலில் 19வது ஓவரை வீசிய தீபக் சாஹர், முதல் இரண்டு பந்துகளை தொடர்ச்சியாக நோ பாலாக வீசினார். அதில் முதல் பந்தில் பவுண்டரியும் இரண்டாவது பந்தில் 2 ரன்களும் எடுக்கப்பட்டன. இரண்டாவது நோ பாலை வீசியதும் கடும் கோபமடைந்த தோனி, தீபக் சாஹரை திட்டியதோடு ஆலோசனையும் வழங்கினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்நிலையில், தன் மீது கோபப்பட்ட தோனி, போட்டி முடிந்ததும் என்ன செய்தார் என்று தீபக் சாஹர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய தீபக் சாஹர், போட்டி முடிந்ததும் அனைத்து வீரர்களும் என்னிடம் வந்து, டெத் ஓவரை நன்றாக வீசியதாக பாராட்டினர். நான் தொடர்ந்து நோ பாலாக போட்டதால் என் மீது கோபப்பட்டு திட்டிய கேப்டன் தோனியும் என்னை பார்த்து சிரித்து கட்டிப்பிடித்தார். நன்றாக பந்துவீசியதாகவும் இந்த சீசன் முழுவதும் நன்றாக வீசுமாறும் கூறினார் என்று தீபக் சாஹர் தெரிவித்தார். 
 

click me!