பார்த்தியா தல.. என்னையவே கால வார பார்க்குற!! தோனியின் திட்டத்தை முறியடித்த பாண்டியா.. சுவாரஸ்ய வீடியோ

Published : Apr 04, 2019, 12:08 PM IST
பார்த்தியா தல.. என்னையவே கால வார பார்க்குற!! தோனியின் திட்டத்தை முறியடித்த பாண்டியா.. சுவாரஸ்ய வீடியோ

சுருக்கம்

சில வீரர்களை பவுலர்களால் வீழ்த்த முடியாத சூழலில், ஏதேனும் திட்டம் தீட்டி அவர்களை எப்படியாவது தனது சமயோசித புத்தியால் வீழ்த்திவிடுவார் தோனி. அதைத்தான் பாண்டியாவிடமும் முயற்சி செய்தார். 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது.

மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்களை குவித்தது. 171 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, வெறும் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 160 ரன்களுக்குள் சுருட்டியிருக்கலாம். ஆனால் ஹர்திக் பாண்டியா தான் கடைசி இரண்டு ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட்டார். 50 ரன்களுக்கே ரோஹித், டி காக், யுவராஜ் சிங் ஆகிய மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது மும்பை இந்தியன்ஸ். பின்னர் சூர்யகுமாரும் குருணல் பாண்டியாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். 18 ஓவர் முடிவில் மும்பை அணி வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கடைசி 2 ஓவர்களில் ஹர்திக் பாண்டியாவும் பொல்லார்டும் இணைந்து 45 ரன்களை குவித்துவிட்டனர். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவே அமைந்தது. 

சில வீரர்களை பவுலர்களால் வீழ்த்த முடியாத சூழலில், ஏதேனும் திட்டம் தீட்டி அவர்களை எப்படியாவது தனது சமயோசித புத்தியால் வீழ்த்திவிடுவார் தோனி. அதைத்தான் பாண்டியாவிடமும் முயற்சி செய்தார். 18வது ஓவரின் இரண்டாவது பந்தை பாண்டியா டீப் பாயிண்ட் திசையில் தட்டிவிட்டு சிங்கிள் ஓடினார். அந்த பந்தை ஃபீல்டர் பிடித்துவீச, அதை விடுவது போல் விட்டு ஏப்பு காட்டினார் தோனி. உடனே இரண்டாவது ரன் ஓட முயன்றார் பாண்டியா. ஆனால் விடுவது போல் விட்ட பந்தை வேகமாக ஓடிச்சென்று எடுத்து பாண்டியாவை ரன் அவுட் செய்ய முயன்றார் தோனி. ஆனால் பாண்டியா வெகுதூரம் ஓடாததால் ஈசியாக கிரீஸுக்குள் வந்துவிட்டார். பின்னர் இருவரும் சிரிப்பை உதிர்த்துவிட்டு நகர்ந்தனர். பார்த்தியா தல என்னயவே காலை வார பார்த்த என்கிற ரீதியாக தோனியை பார்த்து பாண்டியா சிரிக்க, தோனியும் சிரித்துவிட்டு சென்றார். அந்த சுவாரஸ்ய வீடியோ இதோ.. 

PREV
click me!

Recommended Stories

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்