தோனியின் ஹெலிகாப்டரை வான்கடேவில் பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா.. தோனியின் ரியாக்‌ஷனை இந்த வீடியோவில் பாருங்க

By karthikeyan VFirst Published Apr 4, 2019, 11:34 AM IST
Highlights

அதிகபட்சமாக 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டிய போட்டியில் 170 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 171 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி, வெறும் 133 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. 

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ரோஹித், குயிண்டன் டி காக் மற்றும் யுவராஜ் சிங் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் 50 ரன்களுக்குள் இழந்துவிட்டது. அதன்பின்னர் சூர்யகுமார் யாதவும் குருணல் பாண்டியாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடி ரன்களை உயர்த்தினர். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 62 ரன்களை சேர்த்தது. 

குருணல் பாண்டியா 42 ரன்களில் அவுட்டாக, சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.18 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 125 ரன்கள் எடுத்திருந்தது. 18வது ஓவரின் கடைசி பந்தில் சூர்யகுமார் ஆட்டமிழந்தார். 19வது ஓவரில் 2 சிக்ஸர்கள் உட்பட 16 ரன்கள் எடுக்கப்பட்டது. 19 ஓவர் முடிவில் 141 ரன்களை எடுத்திருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. பிராவோ வீசிய கடைசி ஓவரில்தான் ஆட்டமே தலைகீழாக மாறியது.

பிராவோ வீசிய கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியாவின் சிக்ஸர் மழையால் 29 ரன்கள் குவிக்கப்பட்டன. கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளுக்கு வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. 3வது பந்தை பொல்லார்டு சிக்ஸர் விளாசினார். அத்துடன் அந்த பந்து நோ பாலானதால், திரும்ப வீசப்பட்ட 3வது பந்தில் 3 ரன்கள் எடுக்கப்பட்டன. எனவே 3 பந்துகளில் 13 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி மூன்று பந்துகளில் ஆக்ரோஷமாக ஆடிய ஹர்திக் பாண்டியா, 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். மொத்தமாக அந்த ஓவரில் 29 ரன்கள் குவிக்கப்பட்டன. 

இந்த ஓவர் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவே அமைந்துவிட்டது. அதிகபட்சமாக 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டிய போட்டியில் 170 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 171 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி, வெறும் 133 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா அடித்த இரண்டு சிக்ஸர்களில் ஒரு சிக்ஸர் ஹெலிகாப்டர் ஷாட். பொதுவாக யார்க்கர் மற்றும் ஃபுல் லெந்த் பந்துகளை தோனிதான் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பார். ஆனால் இப்போது பல வீரர்கள் அந்த ஷாட்டை மிகவும் நேர்த்தியாக அடிக்கின்றனர். இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் ஆகியோர் ஹெலிகாப்டர் ஷாட்டுகளை ஏற்கனவே ஆடியுள்ளனர். 

ஆனால் தோனி கண் முன்பாகவே அவரது ஷாட்டை மிக நேர்த்தியாக அடித்தார் ஹர்திக் பாண்டியா. பிராவோ வீசிய கடைசி ஓவரின் 4வது பந்தை ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஹர்திக் பாண்டியா. அபாரமான ஷாட் அது. மிக நீண்ட தூரம் சென்று பந்து விழுந்தது. அந்த ஷாட்டின் வீடியோ இதோ.. 

click me!