எங்களோட தொடர் தோல்விக்கு இது ஒண்ணுதான் காரணம்!! ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி

By karthikeyan VFirst Published Apr 10, 2019, 11:50 AM IST
Highlights

விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஹெட்மயர், மொயின் அலி, சாஹல், டிம் சௌதி, கோலின் டி கிராண்ட் ஹோம், மார்கஸ் ஸ்டோய்னிஸ் என சிறந்த வீரர்களை அணியில் பெற்றிருந்தும், இதுவரை இந்த சீசனில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் திணறுகிறது ஆர்சிபி அணி. 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் ஆகிய இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப், சன்ரைசர்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் மாறி மாறி வெற்றி தோல்விகளை சந்தித்துவருகின்றன. சிஎஸ்கே மற்றும் கேகேஆர் ஆகிய அணிகளை தவிர இந்த அணிகளில் ஏதேனும் 2 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். 

ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணிக்கு இந்த சீசன் படுமோசமாக அமைந்துள்ளது. விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய 2 ஜாம்பவான்கள் அந்த அணியில் இருந்தும் அந்த அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. 

இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆர்சிபி களமிறங்கியது. ஆனால் முதல் போட்டியில் வெறும் 70 ரன்கள் மட்டுமே எடுத்து சிஎஸ்கேவிடம் தோற்றது ஆர்சிபி. அதன்பின்னர் தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடள்ஸ், கேகேஆர் ஆகிய அணிகளிடம் தோற்றுள்ளது ஆர்சிபி. 

விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஹெட்மயர், மொயின் அலி, சாஹல், டிம் சௌதி, கோலின் டி கிராண்ட் ஹோம், மார்கஸ் ஸ்டோய்னிஸ் என சிறந்த வீரர்களை அணியில் பெற்றிருந்தும், இதுவரை இந்த சீசனில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் திணறுகிறது ஆர்சிபி அணி. ஆர்சிபி அணி தொடர் தோல்வியால் துவண்டு போயுள்ளது. இனிமேல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. 

ஆர்சிபி ஆடிய 6 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு எழுதியுள்ள கட்டுரையில், தோல்விக்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளார் டிவில்லியர்ஸ். கிரிக்கெட்டில் ஒரு அணி களத்தில் ஃபீல்டிங் செய்வதை வைத்தே அந்த அணியை மதிப்பீடு செய்துவிடலாம். ஒவ்வொரு வீரருமே பேட்ஸ்மேன் அல்லது பவுலராக இருப்பார். அவர்கள் அவரவர் பணியில் கூடுதல் கவனம் செலுத்தினாலும் கூட, ஃபீல்டிங்கிலும் சிறந்து விளங்க வேண்டும். என்னை பொறுத்தவரை ஒரு வீரர் அனைத்து வகையிலும் களத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற வேட்கையில் கூட்டாக இணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும். 

ஆனால் அதை செய்வதில்தான் நாங்கள் தோற்றுவிட்டோம். இந்த சீசனில் எங்கள் அணியின் ஃபீல்டிங் மிக மிக மோசம். ஒவ்வொரு போட்டியிலும் சில கேட்ச்களை விடுவது நல்லதல்ல. மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராகவும் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டியது. ஆனால் தோற்றுவிட்டோம். அந்த மூன்றிலும் வென்று 6 புள்ளிகளுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் மோசமான ஃபீல்டிங் தான் தோல்விகளுக்கு காரணம் என்று டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். 
 

click me!