மீண்டும் ஒருமுறை தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்.. வீடியோ

Published : Apr 10, 2019, 09:50 AM IST
மீண்டும் ஒருமுறை தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்.. வீடியோ

சுருக்கம்

47 ரன்களுக்கே கேகேஆர் அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ரசல் பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்ததோடு அணியின் ஸ்கோர் 108 ரன்களை எட்ட உதவினார். 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சிஎஸ்கே, இந்த சீசனிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. 

நடப்பு சீசனில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் ஆகிய அணிகள் சிறப்பாக தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தன. முதலிரண்டு இடங்களில் இருந்த இந்த இரண்டு அணிகளும் நேற்று மோதின. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியை வெறும் 108 ரன்களுக்கு சுருட்டியது சிஎஸ்கே அணி. 

47 ரன்களுக்கே கேகேஆர் அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ரசல் பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்ததோடு அணியின் ஸ்கோர் 108 ரன்களாக உதவினார். ரசல் சரியாக ஆடவில்லை என்றால், கேகேஆர் அணி 100 ரன்கள் கூட அடித்திருக்காது. 80 ரன்களுக்குள்ளாகவே சுருண்டிருக்கும். 109 ரன்கள் என்ற இலக்கை 18வது ஓவரில் எட்டி சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

வழக்கமாக மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து எதிரணி வீரர்களை தெறிக்கவிடும் தோனி, இந்த போட்டியிலும் ஒரு மின்னல்வேக ஸ்டம்பிங்கை செய்தார். இளம் வீரர் ஷுப்மன் கில் இந்த முறை தோனியின் ஸ்டம்பிற்கு பழியானார். 

இம்ரான் தாஹிர் வீசிய 11வது ஓவரின் முதல் பந்தை அடிக்க முயலும்போது பேலன்ஸ் மிஸ் ஆகி கிரீஸை விட்டு வெளியேற, அதிவேகமாக செயல்பட்ட தோனி, கில்லை ஸ்டம்பிங் செய்தார். அந்த வீடியோ இதோ.. 

PREV
click me!

Recommended Stories

CSK vs PBKS: 200 ரன் அடிச்சும் CSK தோத்துப்போனது ஏன்? 5 காரணங்கள்!
CSK vs PBKS: IPL 2026: சேப்பாக்கத்தில் இன்று சிஎஸ்கே vs பஞ்சாப் - விறுவிறுப்புக்கு கார்ண்டி..