ஆர்சிபி அணியை நம்பவைத்து கழுத்தறுத்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்!! கோலி & கோவில் இணையும் மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர்

By karthikeyan VFirst Published Apr 12, 2019, 5:00 PM IST
Highlights

இந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்புடன் அணியில் எடுக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஹெட்மயர், முதல் நான்கு போட்டிகளில் ஒன்றில் கூட சரியாக ஆடவில்லை. அவரை பெரிதும் நம்பி எடுத்த ஆர்சிபி அணிக்கு கடும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்தார். 
 

ஐபிஎல்லில் இதுவரை 11 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் நடந்துவருகிறது. ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கி ஏமாற்றத்துடன் தொடரை முடிக்கிறது. 

விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய இரு ஜாம்பவான்கள் ஒரு அணியில் இருந்தும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட தகுதி பெறவில்லை. கடந்த சீசன் மோசமாக இருந்த நிலையில், இந்த சீசனிலாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு, சிஎஸ்கேவிடம் தொடங்கிய தோல்வி முகம் இன்னும் தொடர்கிறது. 

இந்த சீசனில் இதுவரை ஆடிய 6 போட்டிகளிலும் தோல்வியடைந்து இனிமேல் பிளே ஆஃபிற்கு தகுதி பெற முடியாத நிலையில், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்புடன் அணியில் எடுக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஹெட்மயர், முதல் நான்கு போட்டிகளில் ஒன்றில் கூட சரியாக ஆடவில்லை. அவரை பெரிதும் நம்பி எடுத்த ஆர்சிபி அணிக்கு கடும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்தார். 

மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் நாதன் குல்ட்டர்நைல் ஆகிய இருவரும் ஆர்சிபி அணியில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடர் ஆடியதால் முதல் 3 போட்டிகளில் அவர்கள் ஆடமுடியவில்லை. அந்த தொடர் முடிந்ததும் உடனடியாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஐபிஎல்லில் ஆட இந்தியா வந்து, ஆர்சிபி அணிக்காக ஆடிவருகிறார். ஆனால் குல்ட்டர் நைல் ஆஸ்திரேலியா சென்றுவிட்டார். நாளை(13ம் தேதி) அவர் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அவருக்கு காயம் ஆதலால் அவரால் ஐபிஎல்லில் ஆடமுடியாததாகவும் அதனால் அவர் ஐபிஎல்லில் இருந்து விலகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

அவர் பாகிஸ்தான் தொடரை முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு போட்டிகளில் ஆடாத நிலையில், காயம் ஏற்பட்டிருக்க எல்லாம் வாய்ப்பே இல்லை. உலக கோப்பை வர இருப்பதால் ஓய்வில் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதை வெளிப்படையாக கூறாமல் காயம் என்று கூறி ஒதுங்கியிருக்கலாம். அவர் விலகியதை அடுத்து தென்னாப்பிரிக்க அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெயின் ஆர்சிபி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். டெல் ஸ்டெயினின் வருகை ஆர்சிபி அணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இனிமேல் ஆர்சிபி அணி பிளே ஆஃபிற்கு முன்னேறுவது சாத்தியமில்லாத விஷயம் என்றாலும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால் ஒரு அணியாக அது அந்த அணிக்கு திருப்தியையும் உத்வேகத்தையும் அளிக்கும். 

click me!