வயசானாலும் அவங்க 2 பேரும் தெறிக்கவிடுறாங்க.. அதுலயும் அவரு கிடைக்குற வாய்ப்புலலாம் கிடா வெட்டுறாரு!! தோனி புகழாரம்

By karthikeyan VFirst Published Apr 10, 2019, 2:11 PM IST
Highlights

நடந்துவரும் ஐபிஎல் 12வது சீசனில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே, ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 
 

நடந்துவரும் ஐபிஎல் 12வது சீசனில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே, ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது சிஎஸ்கே. பேட்டிங்கை விட பவுலிங்கில் மிரட்டலாக செயல்படுகிறது. லுங்கி நிகிடி, டேவிட் வில்லி ஆகியோர் இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய நிலையில், பிராவோவும் காயமடைந்து 2 வாரங்களுக்கு ஆடமுடியாமல் ஓய்வில் இருக்கிறார். ஆனால் இவர்களின் விலகல் சிஎஸ்கே அணியை எந்தளவிலும் பாதிக்கவில்லை. 

இந்த சீசனில் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவரும் ஸ்பின்னில் அசத்திவருகின்றனர். அனுபவ ஸ்பின்னர்களான இவர்கள் இருவரும் எதிரணி பேட்டிங் வரிசையை சரித்துவிடுகின்றனர். ஹர்பஜன் சிங் இதுவரை 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இம்ரான் தாஹிரும் வெற்றி நாயகனாக திகழ்கிறார். 

கேகேஆர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அந்த அணியை வெறும் 108 ரன்களுக்கு சுருட்டி, அந்த இலக்கை 18வது ஓவரில் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது. இந்த போட்டியிலும் ஹர்பஜன் சிங் மற்றும் தாஹிர் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

போட்டிக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, பிராவோ அணியில் இல்லாதது பின்னடைவுதான். ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி ஏற்கனவே தொடரிலிருந்து விலகிய நிலையில், பிராவோ காயத்தால் விலகியது பின்னடைவு. எங்கள் அணியில் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோரின் வயது ஒருபுறமிருக்க, இருவரும் முதிர்ந்த அனுபவ வீரர்கள். அந்த வகையில், இருவரும் அபாரமாக வீசிவருகின்றனர். அதிலும் ஹர்பஜன் சிங், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மிரட்டிவருகிறார். அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் சிறப்பாக வீசி விக்கெட்டை தாஹிர் வீழ்த்தி கொடுக்கிறார் என்று ஹர்பஜனையும் தாஹிரையும் பாராட்டி பேசினார் கேப்டன் தோனி.
 

click me!