சாஹலின் பந்தை ஸ்டேடியத்திற்கு வெளியே அனுப்பிய கிறிஸ் லின்.. திகைத்து நின்ற கோலி.. வீடியோ

By karthikeyan VFirst Published Apr 6, 2019, 10:17 AM IST
Highlights

கோலி - டிவில்லியர்ஸின் சிறப்பான மற்றும் பொறுப்பான பேட்டிங் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸின் கடைசி நேர அதிரடியால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 205 ரன்களை குவித்தது. 206 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியின் கிறிஸ் லின் மற்றும் உத்தப்பா ஆகிய இருவரும் நன்றாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

ஐபிஎல் 12வது சீசனில் முதல் நான்கு போட்டிகளிலும் தோற்ற ஆர்சிபி அணி, முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் கேகேஆர் அணியை நேற்று எதிர்கொண்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் விராட் கோலி - டிவில்லியர்ஸ் என்ற வெற்றிகரமான ஜோடி, இந்த சீசனில் முதன்முறையாக ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். 

கோலி - டிவில்லியர்ஸின் சிறப்பான மற்றும் பொறுப்பான பேட்டிங் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸின் கடைசி நேர அதிரடியால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 205 ரன்களை குவித்தது. 206 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியின் கிறிஸ் லின் மற்றும் உத்தப்பா ஆகிய இருவரும் நன்றாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். நிதிஷ் ராணாவும் தினேஷ் கார்த்திக்கும் மிடில் ஓவர்களில் பொறுப்புடன் ஆடினர். கடைசி நேரத்தில் ஆண்ட்ரே ரசலின் அதிரடியால் 3 ஓவர்களில் 66 ரன்களை குவித்து 20வது ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது கேகேஆர் அணி. 

இந்த சீசனில் இதுவரை சரியாக ஆடாத சில வீரர்கள் இந்த போட்டியில் ஆடினர். விராட் கோலி, கிறிஸ் லின் ஆகியோர் இந்த போட்டியில்தான் நன்றாக ஆடினர். இந்த சீசனில் இதுவரை சரியாக ஆடாமல் இருந்த லின், இந்த போட்டியில் 43 ரன்கள் அடித்தார். 

கேகேஆர் இன்னிங்ஸின்போது, சாஹல் வீசிய 6வது ஓவரின் 5வது பந்தை கிறிஸ் லின் வலுவாக அடித்தார். அந்த பந்து ஸ்டேடியத்திற்கு வெளியே சென்றது. அதைக்கண்டு கோலி மிகுந்த அதிருப்தியடைந்தார். கிறிஸ் லின் பந்தை ஸ்டேடியத்திற்கு வெளியே அனுப்பிய வீடியோ இதோ... 

click me!