ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்தும் கேகேஆரை வீழ்த்த அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் ஆர்சிபி

By karthikeyan VFirst Published Apr 5, 2019, 6:52 PM IST
Highlights

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. 
 

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. 

கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு இந்த சீசனும் சோகமாக அமைந்துவிட்டது. இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது ஆர்சிபி. 

முதல் வெற்றியை பெறும் தீவிரத்தில் உள்ள ஆர்சிபி அணி, இன்றைய போட்டியில் வலுவான கேகேஆர் அணியை எதிர்கொள்கிறது. இந்த சீசனில் கேகேஆர் அணி எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக ஆடிவருகிறது. 

கேகேஆர் அணியை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. ஆனாலும் கேகேஆரை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த போட்டியில் தோல்வியடைந்த பிறகு, அடுத்த போட்டியில் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படும் என ஆர்சிபி கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். 

அந்த வகையில் தொடர்ந்து சொதப்பிவரும் ஹெட்மயரை நீக்கிவிட்டு ஆஸ்திரேலிய பவுலிங் ஆல்ரவுண்டர் நாதன் குல்ட்டர்நைல் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல வாஷிங்டன் சுந்தரும் அணியில் சேர்க்கப்படலாம். 

உத்தேச ஆர்சிபி அணி:

பார்த்திவ் படேல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், மொயின் அலி, வாஷிங்டன் சுந்தர், நாதன் குல்ட்டர் நைல், சைனி, சாஹல், முகமது சிராஜ்.

click me!