
பொது சிவில் சட்டம் (UCC- Uniform Civil Code) குறித்த நியூஸ் 18 நெட்வொர்க் நடத்திய மெகா கருத்துக்கணிப்பில் 67.2 சதவீத முஸ்லிம் பெண்கள் திருமணம், விவாகரத்து மற்றும் தத்தெடுப்பு போன்ற விஷயங்களில் அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 8,035 முஸ்லிம் பெண்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
பங்கேற்பாளர்கள் 18 முதல் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். வெவ்வேறு சமூகங்கள், பிராந்தியங்கள், கல்வி மற்றும் திருமண நிலைகளைச் சேர்ந்தவர்கள்.ஆவர். இந்த கருத்துக்கணிப்பில், அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான சட்டங்களை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, கணக்கெடுக்கப்பட்ட மொத்த பெண்களில் 67.2 சதவீதம் பேர் ‘ஆம்’ என்றும் 25.4 சதவீதம் பேர் ‘இல்லை’ என்றும் பதிலளித்தனர். 7.4 சதவீதம் பேர் ‘தெரியாது அல்லது சொல்ல முடியாது’ என்றும் பதிலளித்துள்ளனர்.
ஹிமாச்சலில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கனமழை.. கேரளாவை சேர்ந்த 45 பயிற்சி மருத்துவர்களின் நிலை என்ன?
கல்வித் தகுதியின் அடிப்படையில், 68.4 சதவீதம் அல்லது 2,076 பட்டம் பெற்ற பெண்கள் பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாகவும், 27 சதவீதம் பேர் அதை ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், வயது வாரியான பதில்களில், 18-44 வயதுக்குட்பட்ட பெண்களில் 69.4 சதவீதம் பேர் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும், 24.2 சதவீதம் பேர் அனைவருக்கும் பொதுவான சட்டங்கள் வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
பொது சிவில் சட்டம் என்பது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொதுவான சட்டத்தைக் குறிக்கும். இந்த சட்டங்கள் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு மற்றும் பரம்பரை போன்ற தனிப்பட்ட விஷயங்களை உள்ளடக்கும். சமீபத்தில் பிரதமர் மோடி, நாட்டிற்கு ஒரு பொதுவான சட்டம் தேவை என்று கூறி பொது சிவில் சட்டம் குறித்து கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக பொது சிவில் சட்டம் மீண்டும் விவாதப் பொருளாகி உள்ளது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால், அனைத்து மதங்களையும் பாதிக்கும் என்று இந்தியாவில் உள்ள முஸ்லீம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
வட மாநிலங்களைப் புரட்டிப் போடும் வெள்ளப் பெருக்கு: தத்தளிக்கும் இமாச்சல், டெல்லி மக்கள்!