அம்மாவின் அலமாரியில் இருந்த காண்டம்.. போட்டோ எடுத்து ட்விட்டரில் போட்ட மகள்.. பங்கம் செய்யும் நெட்டிசன்கள்

Published : Jul 10, 2023, 01:28 PM ISTUpdated : Jul 10, 2023, 01:36 PM IST
அம்மாவின் அலமாரியில் இருந்த காண்டம்.. போட்டோ எடுத்து ட்விட்டரில் போட்ட மகள்.. பங்கம் செய்யும் நெட்டிசன்கள்

சுருக்கம்

தனது தாயின் அலமாரியில் கண்டெடுக்கப்பட்ட படத்தைப் பதிவிட்ட பெண் ஒருவர் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறார்.

செக்ஸ் என்பது நம் சமூகத்தில் இன்னும் பொதுவெளியில் பேசுவதற்கு கூச்சப்படும் ஒரு விஷயமாகவே உள்ளது. எல்லோராலும் எளிதாகவும் சுதந்திரமாகவும் அதைப் பற்றி பேச முடியாது. இருப்பினும், ‘நிகோலா’ என்ற ட்விட்டர் பயனர் ஒருவர், தனது தாயின் தனியுரிமையை சமூக ஊடகங்களில் பதிவிட்டதால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். 

டியூரெக்ஸ் காண்டம் பாக்ஸின் படத்தைப் பகிர்ந்தபோது, " என் அண்ணன் இதை என் அம்மாவின் டிராயரில் இருந்து கண்டுபிடித்தார்," என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.இந்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து, நூற்றுக்கும் அதிகமான பதில்களுடன் படம் வைரலாகியுள்ளது.

 

மேலும் ட்விட்டர் பயனர்கள் இந்த புகைப்படத்திற்கு தங்கள் கடுமையான கமெண்ட்களையும் பதிவு செய்து வருகின்றனர்.ட்விட்டர் பயனர் ஒருவர் “  தனிப்பட்ட எல்லைகள் எதுவும் தெரியாத உன்னைப் போன்ற மற்றொரு அவமானகரமான குழந்தையை அவள் விரும்பவில்லை. உங்கள் பெற்றோரின் பாலியல் வாழ்க்கை அவர்களின் தனிப்பட்ட இடமாகும், அதில் ஊடுருவ உங்களுக்கு உரிமை இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

“இந்தக் கண்டுபிடிப்பை இன்னும் கொஞ்சம் முன்னதாகவே உன் அம்மா கண்டுபிடித்திருந்தால், உன்னையும், உன் அண்ணனையும் பிறக்காமல் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பயனர் “ உன் தாயின் தனியுரிமைக்குள் நுழைவதே தவறு. அதை இப்படி எடுத்து ட்வீட் போடலாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

” உன்னை போன்ற குழந்தைகளை பெறாமல் இருக்க. உனது தாய் அதை வைத்திருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

 “ உன் பெற்றோர் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கலாம். அதில் தவறேதும் இல்லை. மனித இயல்பு. ஆனால் அதை நீங்கள் பதிவிட்டது அதை விட மோசம்” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!