ஹிமாச்சலில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கனமழை.. கேரளாவை சேர்ந்த 45 பயிற்சி மருத்துவர்களின் நிலை என்ன?

By Ramya s  |  First Published Jul 10, 2023, 2:37 PM IST

ஹிமாச்சலில் சிக்கித் தவிக்கும் 45 மருத்துவர்களில், 27 பேர் கொச்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் 18 பேர் திருச்சூரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.


இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்திற்கு மத்தியில், கேரளாவைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் உட்பட ஏராளமான நபர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித் தவிக்கின்றனர். இவர்களில் களமசேரி மற்றும் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் உள்ளனர். சிக்கித் தவிக்கும் 45 மருத்துவர்களில், 27 பேர் கொச்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் 18 பேர் திருச்சூரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் வர்கலா மற்றும் கொல்லத்தைச் சேர்ந்த நபர்களும் மணாலியில் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே களம்சேரி அரசு மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் என்.எஸ்.கே உமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர் “ ஹமிச்சலில் சிக்கி உள்ள பயிற்சி மருத்துவர்கள், தங்களின் இருப்பிடம் குறித்த தகவலை எங்களுக்கு அனுப்பினர். நாங்கள் அதனை மணாலி ஆட்சியருக்கு அனுப்பி உள்ளோம். இளம் பயிற்சி மருத்துவர்கள் தற்போது பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஹிடிம்பா கோயிலுக்கு அருகே உள்ள நசோகி உட்ஸ் ஹோட்டலில் அவர்கள் தங்கி உள்ளனர்” என்று தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

அன்னபாக்யா திட்டம்: பொதுமக்களுக்கு பணம் கிடைப்பதில் சிக்கல் - என்ன காரணம்?

இதனிடையே திரிச்சூரில் இருந்து பயிற்சி மருத்துவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்த, டிராவல் ஏஜென்சியும் பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் மணாலியில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள கேரள அரசாங்கப் பிரதிநிதி கே வி தாமஸ், கொச்சியில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று உறுதியளித்தார்.

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு, திடீர் வெள்ளம் மற்றும் பெரும் சேதம் ஏற்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது கனமழை பெய்து வருவதால், மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் சண்டிகர்-மணலி தேசிய நெடுஞ்சாலை உட்பட 765 சாலைகள் மூடப்பட்டன.

இதன் விளைவாக லாஹவுல் மற்றும் ஸ்பிதியில் உள்ள சந்திரதால் மற்றும் சோலன் மாவட்டத்தில் உள்ள சதுபுல் போன்ற பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கித் தவித்தனர். கடந்த 48 மணி நேரத்தில் 20 நிலச்சரிவுகள், 17 திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக அழிந்தன. ராவி, பியாஸ், சட்லஜ், ஸ்வான், செனாப் உள்ளிட்ட முக்கிய ஆறுகள் நிரம்பி வழிகின்றன. துரதிர்ஷ்டவசமாக, மணாலியில் கடைகள் அடித்துச் செல்லப்பட்டன, நுல்லா, குலு, கின்னவுர் மற்றும் சம்பா ஆகிய இடங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

வட மாநிலங்களைப் புரட்டிப் போடும் வெள்ளப் பெருக்கு: தத்தளிக்கும் இமாச்சல், டெல்லி மக்கள்!

click me!