மும்பை விமானநிலையத்தில் ஒரு சூடான தேநீர் மற்றும் ஒரு சமோசா சாப்பிட்ட பத்திரிகையாளருக்கு என்ன பில் கட்டச்சொன்னார்கள் எனத் தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்.
மும்பை விமானநிலையத்தில் ஒரு சூடான தேநீர் மற்றும் ஒரு சமோசா சாப்பிட்ட பத்திரிகையாளருக்கு என்ன பில் கட்டச்சொன்னார்கள் எனத் தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்.
கடுமையான வேலைப்பளுவையும், உடல்சோர்வையும் மறந்து சிறிது ரிலாக்ஸாக வைப்பதில் தேநீர், காபி முக்கியப் பங்கு வகிக்கிறது, அதோடு சமோசாவும் சேர்ந்தால், புதிய உற்சாகம் பிறக்கும். தேநீரும், சமோசாவும் தென் மாநிலங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல, வடமாநிலங்களிலும் அதிகம்பரிட்சயமானது.
இந்துக்களே கத்திய கூர்மையாக வெச்சிருங்க!பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் மீது 7 பிரிவில் வழக்கு
சமீபத்தில் பத்திரிகையாளர் பாரா கான் என்பவர் மும்பை விமானநிலையத்தில் சமோசாவையும், தேநீரையும் வாங்கி சாப்பிட்டபின், பில்லைப் பார்த்தபோது அவருக்கு தூக்கிவாறிப்போட்டுள்ளது. பில்லைப் பார்த்தபின் இனிமேல் சமோசா சாப்பிடலாமா, தேநீர் குடிக்கலாமா என்ற யோசனைக்கே சென்றுவிட்டார்.
பேசும் தமிழுக்கு ரூ.74 கோடி! பேசாத சமஸ்கிருதத்துக்கு ரூ.1,488 கோடி ஒதுக்கிய மத்திய அரசு
இரு சமோசாக்கள், ஒரு தேநீர், ஒரு தண்ணீர் பாட்டில் சேர்த்து ரூ.490 செலுத்தக் கூறியுள்ளனர். இதை பாரா கான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் “ 2 சமோசா, ஒரு தேநீர், ஒரு குடிநீர் பாட்டில் மும்பை விமானநிலையத்தில் எவ்வளவு தெரியுமா ரூ.490. சிறப்பான நாட்கள் இங்குதான் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை சாரா கான் நேற்று பதிவிட்டுள்ளார், ஆனால், 11ஆயிரம் லைக்குகள் வந்துவிட்டன, 13 லட்சம்பேர் பார்த்துவிட்டனர். ஒரு தேநீர்,2 சமோசா, ஒரு வாட்டர் பாட்டில் சேர்த்தால், ரூ.75க்கு மேல் இருக்காது. ஆனால், ரூ.490 விலை அநியாயம்தான்.
பாரா கான் ட்வீட்டுக்கு ஏராளமானோர் பதில் அளித்துள்ளனர். அதில் ஒருவர் “ 2 சமோசா, ஒரு தேநீர், வாட்டர் பாட்டில் சேர்த்தால் ரூ.52தான் மும்பை கான்டிவாலா ரயில்நிலையத்தில் வாங்குகிறார்கள்” எனத் தெரிவித்தார்
Two samosas, one chai and one water bottle for 490 Rs at Mumbai airport!! Kafi ache din aa gae hain. pic.twitter.com/aaEkAD9pmb
— Farah khan (@farah17khan)அதில் ஒருவர் பதிவிட்ட கருத்தில் “ மேடம், ஒரு இட்லி, ஒரு வடை ரூ.100 எங்கு தெரியுமா ஹைதராபாத் விமானநிலையத்தில்தான். ஒரு ஆரஞ்சு ஜூஸ் ரூ.150 தெரியுமா ? “ எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி 113 முறை பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளார்:காங்கிரஸ் கட்சிக்கு சிஆர்பிஎப் பதில்
மற்றொரு பதிவிட்ட கருத்தில் “ நான் பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானத்தில் சென்றேன். அப்போதுகொல்கத்தா விமானநிலையத்தில் 2 சமோசாக்கள் விலையேக் கேட்டேன். ரூ.250 என்றதும் அங்கு நான் நிற்கவே இல்லை, அங்கிருந்து ஓடிவிட்டேன்”எ னத் தெரிவித்துள்ளார்