2021ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்ற சாலை விபத்துகள் குறித்த அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை 'இந்தியாவில் சாலை விபத்துகள் 2021' என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 2021ஆம் ஆண்டில் சாலை விபத்து தொடர்பான முக்கிய புள்ளிவிவரங்களில் முன்னேற்றம் இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டு மொத்தம் 4,12,432 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 1,53,972 பேர் உயிரிழந்துள்ளனர், 3,84,488 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பொருளாதார அடிப்படையில் தரவரிசை: மத்திய அரசின் புதிய திட்டம்
2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021ஆம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 8.1 சதவீதம் குறைந்திருக்கிறது என்றும் காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் 14.8 சதவீதம் குறைந்துள்ளது என்றும் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால், சாலை விபத்தில் ஏற்பட்ட மரணங்கள் 1.9 சதவீதம் கூடியிருக்கிறது. அதே நேரத்தில் 2020ஆம் ஆண்டில் சாலை விபத்துகளும் அவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2020ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு முழுவதும் கோரோனா தடுப்புக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது விபத்துகள் குறைவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் உள்ள தரவுகள் ஐ.நா. சபை அளித்த வழிகாட்டுதலின்படி, அனைத்து மாநிலங்களின் காவல்துறையினரிடமிருந்து பெறப்பட்டது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குனோ பூங்காவில் சிறுத்தை சுற்றுலா! சௌகான் தகவல்