PM Modi: பிரதமர் மோடி நாளை மேற்கு வங்கம் பயணம்: வந்தே பாரத் ரயில் உள்பட ரூ.7,800 கோடி திட்டங்கள் தொடக்கம்

By Pothy RajFirst Published Dec 29, 2022, 12:33 PM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடி நாளை(வெள்ளிக்கிழமை) மேற்கு வங்க மாநிலத்துக்கு பயணம் செய்து ரூ.7,800 கோடிமதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி நாளை(வெள்ளிக்கிழமை) மேற்கு வங்க மாநிலத்துக்கு பயணம் செய்து ரூ.7,800 கோடிமதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். 

ஹவுரா-நியூஜல்பை குரி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு நாளை 11மணிக்கு செல்லும் பிரதமர் மோடி, 11.15 மணிக்கு ஹவுரா ரயில்நிலையம் செல்கிறார். அங்கு ஹவுரா-நியூ ஜல்பைகுரி நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலே பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

ராகுல் காந்தி பாதுகாப்பில் குறைபாடு, அத்துமீறல்!அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்

மேற்கு வங்கத்தின் ஹவுரா நகரில் இருந்து ஜல்பைகுரி வரை இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. அதிகவேகம் செல்லக்கூடிய, பயணிகளுக்கான அதிநவீன வசதிகள் கொண்ட வந்தேபாரத் ரயில் இரு வழித்தடங்களுக்கு இடையே 7.5 மணிநேரம் பயணிக்கும். மால்டா நகரம், பர்சோய், கிசான்கஞ்ச் நகரங்களில் இந்த ரயில் நின்று செல்லும். வாரத்தில் 6 நாட்கள் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். 

ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து காலை 6மணிக்குப் புறப்படும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில், நியூ ஜல்பைகுரிக்கு பிற்பகல் 1.30 மணிக்கு சென்றடையும். அங்கு ஒரு மணிநேரத்துக்குப்பின், பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10 மணிக்கு ஹவுரா வந்து சேரும். 

மேற்கு வங்கத்துக்கு முதல் வந்தே பாரத் ரயில்: 30ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

கொல்கத்தா மெட்ரோவின் ஊதாவழிப்பாதையான ஜோகா தராதாலா வழித்தடத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அங்கிருந்தவாரே நாட்டுக்கு பல்வேறு ரயில்வே திட்டங்களையும் பிரதமர் மோடி அர்ப்பணிக்க உள்ளார். இந்தத் திட்டம் ரூ.2,475 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால், சர்சுனா, தக்கார், முச்சிபாரா, சவுத் 24பர்கானா மக்கள் பலன் அடைவார்கள். 

நண்பகல் 12மணிக்கு நேதா சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மரியாதை செய்யும்  பிரதமர் மோடி, டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி- தேசிய நீர் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனத்தை தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இது ரூ.100 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. 

இந்தப் பயணத்தில் தேசிய கங்கை நதி சுத்தப்படுத்தும் திட்டத்தின் 7 சுத்திகரிப்புத் திட்டத்தப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார், இதன் மதிப்பு ரூ.990 கோடியாகும். இந்தத் திட்டத்தால், 16 நகராட்சிகள் பயன்பெறும்.

அதன்பின் 12.15 மணிக்கு தேசிய கங்கா கவுன்சிலின் 2வது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதில் மத்திய ஜல்சக்தி அமைச்சர், மத்திய அமைச்சர்கள், உத்தரகாண்ட் முதல்வர், உத்தரப்பிரதேசம், பீகார், ஜாக்கண்ட், மேற்கு வங்க முதல்வர்கள் பங்கேற்கிறார்கள். 
 

click me!