Pragya Thakur: கொந்தளிப்பான பேச்சு! பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் மீது கர்நாடக போலீஸார் எப்ஐஆர் பதிவு!

By Pothy RajFirst Published Dec 29, 2022, 2:27 PM IST
Highlights

பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் சமீபத்தில் நடந்த நிகழச்சியில் இரு சமூகத்துக்கு இடையே கலவரம் மூளும்வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதையடுத்து அவர் மீது கர்நாடக போலீஸார் முதல்தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் சமீபத்தில் நடந்த நிகழச்சியில் இரு சமூகத்துக்கு இடையே கலவரம் மூளும்வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதையடுத்து அவர் மீது கர்நாடக போலீஸார் முதல்தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் ஷிவமோகா நகரில் கடந்த 25ம்தேதி  நடந்த இந்து ஜாக்ரனா வேதிகாவின் தென் மண்டல ஆண்டு பட்டமளிப்பு விழாவில் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: 

கடினமான நேரத்தில் என் அன்பும்,ஆதரவும் இருக்கும்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி ஆதரவு

லவ்ஜிஹாத் செய்பவர்களிடம் இருந்து உங்களை பெண் குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள், இந்துத்துவா ஆர்வலர்கள் கொல்லப்படுகிறார்கள். ஆதலால், இந்துக்கள் அனைவரும் சுயபாதுகாப்புக்காக தங்கள் வீட்டில் இருக்கும் கத்தியை கூர்மையாக வைத்துக்கொள்ளுங்கள்

உங்கள் வீட்டில் ஆயுதங்களை பாதுகாப்பாக வையுங்கள். ஏதும் நடக்காவிட்டால், அந்த கத்தியை, ஆயுதத்தை வைத்து காய்கறி நறுக்குங்கள். ஆனால் கூர்மையாக வைத்திருங்கள். எந்தவிதமான சூழல் எழும் என யாருக்கும் தெரியாது.

இவ்வாறு பிரக்யா தாக்கூர் தெரிவித்தார்

பிரக்யா சிங் தாக்கூர் சர்ச்சைப் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பிரக்யா தாக்கூர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கக் கோரி ஷிவமோகா காங்கிரஸ் தலைவர் டெஹ்சீன் பூனாவல்லா போலீஸில் புகார் அளித்திருந்தார்.  இதுதவிர ஷிவமோகா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஹெச்எஸ் சுந்தரேஷ் போலீஸில் புகார் அளித்திருந்தார். 

இந்துக்களே கத்திய கூர்மையாக வெச்சிருங்க!பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் மீது 7 பிரிவில் வழக்கு

இவரின் புகாரையடுத்து, கோட்டே காவல்நிலைய அதிகாரிகள் பிரக்யா தாக்கூர் மீது முதல்தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். இதன்படி பிரக்யா சிங் தாக்கூர் மீது இரு சமூகத்துக்கு இடையே பகையைத் தூண்டும் 153ஏ பிரிவு, உள்நோக்கத்துடன் பிறமதத்தினரை புண்படுத்தும் 295ஏ பிரிவு ஆகியவற்றில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


 

click me!